தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கம்
Jump to navigation
Jump to search
Founded | 2018 |
---|---|
Country | இந்தியா |
Key people | திருப்பூர் சுப்பிரமணியன், ஆர். பன்னீர்செல்வம் |
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கம் (ஆங்கிலம்:Tamilnadu Theatre and Multiplex Owners Association) என்பது தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட வெளியீட்டு அரங்க உரிமையாளர்களின் சங்கமாகும். திரைப்பட வெளியீட்டாளர்களின் உரிமை பாதுகாப்பிற்கும் மற்றும் மேம்பாட்டிற்கும் இச்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.[1] இது 2018 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது.[2] இதன் தலைவராக ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கின் உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியனும், பொதுச் செயலாளராக ரோகிணி திரையரங்கின் உரிமையாளராக ஆர். பன்னீர்செல்வமும், பொருளாளராக டி.என்.சி. மல்டிபிளக்ஸ் உரிமையாளர் டி. சி. இளங்கோவனும் புரவலராக அபிராமி இராமநாதனும் உள்ளனர்.
கவனிக்கப்பட்ட சில அறிவிப்புகள்
- திரையரங்கில் வெளிவந்து எட்டு வார இடைவெளியில் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடக் கோரிக்கை.[3]
- பொன்மகள் வந்தாள் திரைப்படத்தைத் திரையரங்கில் வெளியிடாததல் சூரரைப் போற்று திரைப்படத்தைத் திரையரங்கில் வெளியிடமாட்டோம் என அறிவித்தனர்.[4]
- சட்ட ஒழுங்கு சிக்கலைத் தவிர்க்க தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தைத் தமிழகத்தில் திரையிடல் நிறுத்தம்.[5]
- திரையரங்கிற்குப் பராமரிப்புக் கட்டணத்தை அதிகரிக்கவும் ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட், அழகிப் போட்டி போன்றவற்றையும் திரையரங்கில் ஒளிபரப்பவும் அனுமதி கோரல்[6][7]
- லியோ திரைப்பட முன்னோட்ட வெளியீட்டில் நிகழ்ந்த சம்பவம் காரணமாக இனி, திரையரங்கில் திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை வெளியிடப் போவதில்லை என அறிவிப்பு.[8]
மேற்கோள்கள்
- ↑ "tntmoa.com முதல்பக்கம்". tntmoa. பார்க்கப்பட்ட நாள் 19 October 2023.
- ↑ "மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு புதிய சங்கம் !". நக்கீரன். https://www.nakkheeran.in/cinema/cinema-news/new-council-started-muliplex. பார்த்த நாள்: 19 October 2023.
- ↑ "முன்னணி நடிகர்களின் சினிமாக்களை 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி-யில் வெளியிட வேண்டும்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/838767-cinemas-of-leading-actors-1.html. பார்த்த நாள்: 19 October 2023.
- ↑ "Tamil Nadu theater owners considering ban on Suriya’s movies". இந்தியன் எக்ஸ்பிரஸ். https://indianexpress.com/article/entertainment/tamil/tamil-nadu-theatres-to-impose-ban-on-suriya-films-6378947/. பார்த்த நாள்: 19 October 2023.
- ↑ "Tamil Nadu multiplex owners halt screenings of The Kerala Story; protests, no audience turnout led to decision". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-cinemas-drop-kerala-story-cite-fear-of-damage/articleshow/100058076.cms?from=mdr. பார்த்த நாள்: 19 October 2023.
- ↑ "திரையங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை". தினகரன். https://www.dinakaran.com/fees-theaters-otherstates-allowed-collected-proprietorsassociation-request/. பார்த்த நாள்: 19 October 2023.
- ↑ "கிரிக்கெட், கால்பந்து போட்டிகளை திரையிட அனுமதிக்கணும்.... திரையரங்கு உரிமையாளர்". தினமலர். https://cinema.dinamalar.com/tamil-news/114690/cinema/Kollywood/Cricket-and-football-matches-should-be-allowed-to-be-screened....-Theater-owners-association-request-to-Govt.htm. பார்த்த நாள்: 19 October 2023.
- ↑ [இனி திரையரங்குகளில் டிரெய்லர்கள் வெளியீடு இல்லை - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு "இனி திரையரங்குகளில் டிரெய்லர்கள் வெளியீடு இல்லை - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு"]. தினத்தந்தி. இனி திரையரங்குகளில் டிரெய்லர்கள் வெளியீடு இல்லை - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு. பார்த்த நாள்: 19 October 2023.