பொதுவாக எம்மனசு தங்கம்
பொதுவாக எம்மனசு தங்கம் | |
---|---|
இயக்கம் | தளபதி பிரபு |
தயாரிப்பு | என். ராமசாமி ஹேமா ருக்மிணி |
கதை | தளபதி பிரபு |
இசை | டி. இமான் |
நடிப்பு | உதயநிதி ஸ்டாலின் நிவேதா பெத்துராஜ் பார்த்திபன் சூரி |
ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
படத்தொகுப்பு | தினேஷ் பொன்ராஜ் |
கலையகம் | தேனாண்டால் ஸ்டுடியோ லிமிடெட் |
விநியோகம் | அபிராமி மெகா மால் பிரவேட் லிமிடெட் |
வெளியீடு | 2017 ஆகத்து 11 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொதுவாக எம்மனசு தங்கம் (Podhuvaga Em Manasu Thangam ) என்பது ஒரு இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்கியவர் தளபதி பிரபு ஆவார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் பார்த்திபன் மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ளனர். 2016 செப்டம்பரில் இத் திரைப்படத்தின் தயாரிப்புத் தொடங்கி, 2017 ஆகத்து 11 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[1]
கதை
ஊரில் பெரும் பணக்காரரான ஊத்துக்காட்டான் (பார்த்திபன்) தன்னை எப்போதும் மற்றவர்கள் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புபவர். அவரது மகள் லீலாவதி (நிவேதா பெத்துராஜ்). சிறு வயதில் தன் மகளுக்கு மொட்டையடிப்பதற்காக பக்கத்து கிராமத்துக்குச் செல்கிறார். அப்போது அந்த ஊரில் ஒரு இறப்பு நிகழ்ந்துவிட்டதால், கோயிலை ஊர் மக்கள் பூட்ட, பாதி மொட்டை அடித்ததோடு பார்த்திபன் குடும்பம் வெளியேற நேரிடுகிறது. இதை அவமானமாகக் கருதும் அவர், அந்த கிராமத்தினரைப் பழிவாங்கத் தீர்மானிக்கிறார். அவர்களை ஊரைவிட்டு வெளியேற்றத் திட்டமிடுகிறார்.
இந்த நிலையில், எந்த அடிப்படை வசதியும் இல்லாத அந்த ஊரை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று தன் நண்பன் டைகர் புலியுடன் (சூரி) சேர்ந்து பல திட்டங்களை வகுக்கிறார் கணேஷ் (உதயநிதி). பணக்காரரான ஊத்துக்காட்டானின் தங்கையை பக்கத்து ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் (நமோ நாராயணன்) காதல் திருமணம் செய்த விஷயமும், புகழ்ச்சிக்கு ஆசைப்படும் ஊத்துக்காட்டான் தன் தங்கை வசிக்கும் அந்த ஊருக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுத்த விஷயமும் கணேசுக்குத் தெரியவருகிறது. ஊத்துக்காட்டானின் மகள் நிவேதாவைக் காதலித்தால், ஊத்துக்காட்டான் மூலமாக தன் ஊருக்கும் நல்லது நடக்கும் என்ற யோசனையில், அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். அந்தக் காதல் என்ன ஆனது? ஊர் மக்களை வெளியேற்ற நினைத்த ஊத்துக்காட்டானின் திட்டம் கைகூடியதா? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- உதயநிதி ஸ்டாலின் - கணேஷ்
- நிவேதா பெத்துராஜ் - லீலாவதி லீீ
- பார்திபன் - லீலாவதியின் தந்தை ஊத்துக்காட்டான்
- சூரி - டைகர் புலி
- மயில்சாமி - நாராயணன்
- ஜி. எம். சுந்தர் - தர்மலிங்கம்
- நமோ நாராயணா - ராமலிங்கம்
- விவேக் பிரசன்னா - முருகேசன்
- ரமா - கணேசின் தாயார்
- ராஜேந்திரன் - ராஜேந்திரன்
- புலோரண்ட் சி. பெரிரா
- பாரதி கண்ணன் - பாணு பிரகாஷ்
தயாரிப்பு
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் தயாரிக்கப்போகும் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார்.[2] பொன்ராமின் முன்னாள் உதவி இயக்குனரான தளபதி பிரபு, படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே சமயம் டி. இம்மானை இசையமைகவும், பாலசுப்ரமணியத்தை ஒளிப்பதிவு செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[3] படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடிக்க பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார், அதே நேரத்தில் சூரி படத்தின் நகைச்சுவை நடிகருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[4] கதாநாயகியாக நடிகை நிவேதா போத்தூராஜை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு திரைப் படக் குழுவினர் காத்ரீன் திரீசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.[5][6]
படத்தின் பெயரான பொதுவாக எம்மனசு தங்கம் என்பது முரட்டுக்காளை (1980) படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பானது 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி தேனியில் நடந்தது.[7] படப்பிடிப்பு 60 நாட்களுக்கு நீடித்தது, உதயநிதி இதனுடன் சேர்த்து சரவணன் இருக்க பயமேன் மற்றும் இப்படை வெல்லும் ஆகிய படங்களிலும் பணியாற்றினார் அவரது கடமைகளுடன் இணைந்து பணியாற்றினார்.[8] படத்தின் வெளியீட்டிற்கு முன்னர், உதயநிதியின் தந்தையான மு. க. ஸ்டாலினுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.[9]
வெளியீடு
இந்தப் படம் 2017 செப்டம்பர் 11, உலகமெங்கும் வெளியிடப்பட்டது. இது வெளியான சமயத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் ராமின் தரமணி ஆகியவையும் வெளியாயின. இந்த திரைப்படத்தின் விமர்சணத்தில், டெக்கான் குரோனிக்கலின் அனுபமா சுப்ரமணியம் எழுதியது, " இந்தத் திரைப்படத்தின் பகுதிகளைக் கண்டு அனுபவித்து மகிழலாம்" மற்றும் இந்தத் திரைப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013) படத்துடன் ஒப்பிடப்பட்டது.[10]
மேற்கோள்கள்
- ↑ http://m.behindwoods.com/tamil-movies/podhuvaga-emmanasu-thangam/podhuvaga-emmanasu-thangam-review.html
- ↑ http://www.indiaglitz.com/udhayanidhi-stalin-next-new-movie-produced-by-sri-thenandal-films-tamil-news-151871.html
- ↑ http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/udhayanidhi-stalin-to-team-up-with-director-ponrams-assistant.html
- ↑ http://tamilmovies.com/main/2016/09/09/parthiepan-the-baddie-for-udhayanidhi-stalin/
- ↑ http://www.deccanchronicle.com/entertainment/kollywood/090916/nivetha-pethuraj-pairs-up-with-udhayanidhi-stalin.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-08-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170831174054/https://movieclickz.com/tamil-cinema-news/catherine-tresa-to-romance-udhayanidhi/.
- ↑ http://behindwoods.com/tamil-movies-cinema-news-16/udhayanidhis-next-film-with-thalapathy-has-been-titled-as-podhuvaga-en-manasu-thangam.html
- ↑ https://silverscreen.in/tamil/features/udhayanidhi-stalin-interview-podhuvaaga-en-manasu-thangam-was-a-trip-down-memory-lane/
- ↑ http://www.sify.com/movies/mk-stalin-impressed-with-udhay-s-podhuvaga-emmanasu-thangam-news-tamil-riipFSdaagbfg.html
- ↑ http://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/120817/pet-movie-review-enjoyable-but-only-in-parts.html