புறம்போக்கு என்கிற பொதுவுடமை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புறம்போக்கு என்கிற பொதுவுடமை
இயக்கம்எஸ். பி. ஜனநாதன்
தயாரிப்புசித்தார்த் ரோய் கபூர்
எஸ். பி. ஜனநாதன்
கதைஎஸ். பி. ஜனநாதன்
(கதை & வசனம்)
திரைக்கதைரோகாந்த்
இசைவர்சன்
சிறீகாந்து தேவா (பின்னணி)
நடிப்புஆர்யா
சாம்
விஜய் சேதுபதி
கார்த்திகா நாயர்
ஒளிப்பதிவுஎன். கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்பினாரி பிக்சர்ஸ்
யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
விநியோகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு15 மே 2015 [1]
ஓட்டம்159 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புறம்போக்கு என்கிற பொதுவுடமை (English: Purampokku Engira Podhuvudamai) என்பது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பொலிஸ் நடைமுறைச்சட்ட மூலம் பற்றிய இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை எஸ். பி. ஜனநாதன் இயக்கினார். ஆர்யா, விஜய் சேதுபதி, சாம், கார்த்திகா நாயர் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[2] யுடிவி மோஷன் பிக்சர்ஸினால் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[3] இத்திரைப்படம் என். கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவிலும் புதுமுக இசையமைப்பாளரான வர்சனின் இசையிலும் வெளிவந்தது. முதலில் புறம்போக்கு எனத் தலைப்பிடப்பட்ட போதிலும் பொதுவுடமை பற்றி எடுத்துக்கூறும் திரைக்கதையைக் கொண்டு அமைந்ததால் பின்னர் புறம்போக்கு என்கிற பொதுவுடமை எனத் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டது.[4] ஜனநாயக சமூகத்தில் ஆற்றப்படும் பாரிய குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை விதித்தலுக்கு எதிரான நடவடிக்கைகளே இக்கதையின் மூலக்கரு ஆகும். இத்திரைப்படம் 15 மே 2015 அன்று வெளியிடப்பட்டது.

தயாரிப்பு

வளர்ச்சி

2009 ஆம் ஆண்டில் பேராண்மை திரைப்படத்தை இயக்கிய பின் மூன்று வருடங்களின் பின்னர் தனது முன்னைய திரைப்படங்களில் கதா நாயகர்களாக நடித்த ஜீவா மற்றும் ஜெயம் ரவியை வைத்து ஓர் படம் இயக்கவுள்ளதாக இயக்குநர் ஜனநாதன் அறிவித்தார்.[5] 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் யுவன் சங்கர் ராஜாவே தனது படத்திற்கு இசையமைப்பதாகக் கூறினார்.[6][7] வேறு பல திரைப்படங்களில் ஜீவா மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்ததால் ஆர்யா மற்றும் விஜய் சேதுபதியை வைத்துத் தனது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக 2013 இல் இயக்குநர் ஜனநாதன் அறிவித்தார்.[8] அதற்குப் புறம்போக்கு எனும் தலைப்பிட்டுள்ளதாகவும் அறிவித்தார். யுவன் சங்கர் ராஜாவுக்குப் பதிலாக வர்சன் எனும் புதுமுக இசையமைப்பாளர் இசையமைப்பதாகவும் அறிவித்தார்.[9]

மேற்கோள்கள்