பி. ஜெயம்மா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. ஜெயம்மா
Kannada actress B Jayamma.jpeg
1947 இல் ஜெயம்மா
பிறப்பு(1915-11-15)15 நவம்பர் 1915
பெங்களூர், மைசூர் அரசு
இறப்பு20 திசம்பர் 1988(1988-12-20) (அகவை 73)
பெங்களூர், கருநாடகம், இந்தியா[1]
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்குப்பி ஜெயம்மா
பணி
  • திரைப்பட நடிகை
  • நாடக நடிகை
  • பாடகி
  • அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
குப்பி வீரண்ணா
(தி. 1931; இற. 1972)
பிள்ளைகள்3[2]
பி. ஜெயம்மா
கருநாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1986

பி. ஜெயம்மா (B. Jayamma, 15 நவம்பர் 1915 - 20 திசம்பர் 1988)[2] என்பவர் ஒரு இந்திய நடிகையும், பாடகியும் ஆவார். இவர் குப்பி வீரண்ணாவின் நாடகக் குழுவில் தன் 14 வயதில் மேடையேறினார். பிற்காலத்தில் குப்பி வீரண்ணாவை மணந்துகொண்டார். இவர் 45 ஆண்டுகள் நாடங்களில் நடித்தார். அதே நேரத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்கள் என 45 படங்களில் நடித்தார்.[3]

தொழில்

ஜெயம்மா நடித்த முதல் திரைப்படமானது 1931 இல் ரஃபேல் அல்கோட் இயக்கிய இஸ் லவ் அஃபேர் என்ற திரைப்படமாகும். படத்தைத் தயாரித்த குப்பி வீரண்ணாவுக்கு ஜோடியாக படத்தில் கதாநாயகியாக நடித்தார்.[4] பேசும்படங்கள் வருவதற்கு முன்பு ஜெயம்மா பல ஊமைப் படங்களில் நடித்துள்ளார். 1930களிலும் 1940களிலும் பிரபலமான நடிகையாக இருந்த இவர், தன் கணவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஸ்வர்க சீமா (1945) என்ற தெலுங்குத் திரைப்படத்தில், கணவனால் கைவிடப்பட்ட இல்லத்தரசியான கல்யாணி என்ற பாத்திரத்தில் நடித்தார். கன்னடத் திரைப்படமான ஹேமரெட்டி மல்லம்மா (1946) படத்தில் இவரின் பெயர் கொண்ட பாத்திரத்தில் நடித்தார், அது இவரது கதாபாத்திரம் எதிர்கொள்ளும் துன்பங்களைக் குறிப்பதாக இருந்தது. ஜெயம்மா தனது சில படங்களில் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.[5]

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு Ref.
1931 இஸ் லவ் அஃபேர் ஊமைத் திரைப்படம் [6]
1932 ஹரி மாயா ஊமைப் படம் [6]
1935 சதாரமே திரௌபதி கன்னடம் [6]
1938 குல்-இ-பகவாலி பஞ்சாபி மொழி [6]
1941 சுபத்ரா கன்னடம் [6]
1942 ஜீவனா நாடகா பத்மா கன்னடம் [7]
1944 பர்த்ருஹரி பிங்களா தமிழ் [6]
1945 ஹேமரெட்டி மல்லம்மா மலையாளம் கன்னடம் [6]
1945 சுவர்க சீமா கல்யாணி தெலுங்கு [8]
1946 லவங்கி மும்தாசு மகால் தமிழ் [9]
1946 தியாகையா தர்மாம்பா தெலுங்கு குப்பி ஜெயம்மா என குறிப்பிடப்பட்டது [10]
1947 பிரம்ம ரதம் தெலுங்கு [6]
1949 நாட்டிய ராணி தமிழ் [6]
1949 மங்கையர்க்கரசி தமிழ் [6]
1950 ராஜ விக்கிரமா பிரபாவதி தமிழ் [11]
1951 மந்த்ர தண்டம் யோகிணி தெலுங்கு [6]
1953 குணசாகரி கங்கவ்வா கன்னடம் [6]
1953 குமாஸ்தா சீதா தமிழ் [12]
1954 கற்கோட்டை தமிழ் [6]
1958 அண்ணா தங்கி கன்னடம் [6]
1965 பாலராஜன கதே கன்னடம்
1965 மாவன மகளு கன்னடம் [6]
1966 பிரேமமயி கன்னடம் [6]
1967 இம்மடி புலிகேசி புலிகேசியின் தாய் கன்னடம் [6]
1968 அண்ணா தம்மா கன்னடம் [6]
1968 பேடி பந்தவாலு கன்னடம் [6]
1970 முக்தி சரோஜினியின் தாய் கன்னடம் [13]
1970 நன்ன தம்மா கன்னடம் சிறப்புத் தோற்றம்
1971 சாக்ஷாத்கார தாயம்மா கன்னடம் [6]
1977 புனர்மிளனா கன்னடம்
1980 மிதுனா கன்னடம் சிறப்புத் தோற்றம்
2006 சாவிரா மெட்டிலு கன்னடம் சிறப்புத் தோற்றம்

மரணத்திற்குப் பிந்தைய வெளியீடு

இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு

ஆண்டு பாடல் படம்
1942 "சுமா மாலே" ஜீவனா நாடகா
"மீனங்கா ரூபனா"
1944 "நீரே நீரே மாறன்" பர்த்ருஹரி [14]
"உமையோடு"
1945 "மல்லிகார்ஜுணா பாலிசு" ஹேமரெட்டி மல்லம்மா
"சுபதாதே கோமாதே"
1945 "சலோ சலோ சைக்கிள்" ஸ்வர்க சீமா
"கிரஹமே கட ஸ்வர்க சீமா"
"ஜோ அச்சுதானந்த ஜோஜோ முகுந்தா"
"ராரா ராதா மனோரமணா"
1946 "நீள் கஞ்சாவிழிக்" லாவங்கி
"ஆ ஆ பாடுவோம் எல்லோரும்"
"ஆஹா இன்றே பேரானந்தம்"
1946 "ஆறாகிம்பாவே" தியாகையா
"என்னது செவிஞ்ச லேது"
"என்னகு மனசுக்கு ராணி"
"ஜோ ஜோ ஸ்ரீ ராமா"
"ராரே ராரே பில்லலாரா"
"ஸ்ரீ கல்யாண குணாத்மகா ராம்"
"ஸ்ரீ சீதா ராம கல்யாணம்"
"ஸ்ரீகரம் பைனாட்டி"
1953 "ஆதாரி ஜெகதீஸ்வரி அம்பா" குமாஸ்தா
"தீராத வறுமையுடன்"

மேற்கோள்கள்

நூல்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பி._ஜெயம்மா&oldid=23054" இருந்து மீள்விக்கப்பட்டது