ராஜ விக்கிரமா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராஜ விக்கிரமா
இயக்கம்கெம்பராஜ் அர்ஸ்
தயாரிப்புகெம்பராஜ் அர்ஸ்
கெம்பராஜ் புரொடக்சன்ஸ்
கதைகெம்பராஜ் அர்ஸ்
இசைஎஸ். ராஜம்
நடிப்புகெம்பராஜ் அர்ஸ்
என். எஸ். சுப்பையா
ஸ்டண்ட் சோமு
சி. வி. வி. பந்துலு
எம். வி. ராஜம்மா
பண்டரிபாய்
பி. ஜெயம்மா
வெளியீடுநவம்பர் 29, 1950 (1950-11-29)[1]
நீளம்16263 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்-கன்னடம்

ராஜ விக்கிரமா 1950 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய வரலாற்று நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கெம்பராஜ் அர்ஸ் தயாரித்து இயக்கினார். இத்திரைப்படத்தில் கெம்பராஜ் அர்ஸ், என். எஸ். சுப்பையா, பி. ஜெயம்மா, எம். வி. ராஜம்மா ஆகியோர் நடித்தனர். இது தமிழ், கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.[2]

கதை

சனீஸ்வரனின் அதிருப்திக்கு ஆளான அரசன் கெம்பராஜ், தன்வாழ்வில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறான். திருட்டுப் பழியின் காரணமாக தன் கால்களை இழக்கிறான். ஒரு நிலையில் சனிபகவானுடன் மோத முடியாது என்ற முடிவுக்கு வந்து தன் துன்பங்களில் இருந்து விடுபட சனிபகவானை வழிபடுகிறான். சனிபகவான் அரசனின் கோரிக்கையை ஏற்றாரா அரசன் தன் வாழ்வின் மகிழ்ச்சிகளை மீண்டும் அடைந்தானா என்பதே கதை.

நடிப்பு

நடிகர்கள்[3]
  • மன்னன் விக்ரமனாக கெம்பராஜ் அர்ஸ்
  • பங்காருவாக என். எஸ். சுப்பையா
  • தளபதியாக ஸ்டண்ட் சோமு
  • கோமாளியாக சேதுராமன்
  • அரசரின் ஆலோசகராக சி. வி. வி. பந்துலு
  • நல்ல மனிதராக கணபதி பட்
  • சந்திரசேன மன்னராக மணி ஐயர்
  • காலனாக ஜெயராம்

நடிகைகள்[3]

தயாரிப்பு

இப்படத்தை கெம்பராஜ் அர்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்தார். படத்தில் ராஜம்மா, பி. ஜெயம்மா, தன் மனைவியான லலிதா உள்ளிட்ட மூன்று நாயகிகளைக் கொண்டு படமாக்கினார். ஆயிரம் அடி படமாக்கப்பட்ட நிலையில் லலிதாவின் குரல் சரியில்லை என விநியோகஸ்தர்கள் கூறியதால் தன் மனைவியான லலிதாவை படத்தில் இருந்து நீக்கி, அவருக்கு பதில் பண்டரிபாயை நடிக்கவைத்தார்.[4] ஏ. ராமையா என்பவரால் கோடம்பாக்கத்தில் உருவாக்கபட்ட முதல் படப்பிடிப்புத் தளமான ஸ்டார் கம்பைன்ஸ் ஸ்டுடியோவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டது.[4]

பாடல்

இப்படத்திற்கு சு. ராஜம் இசையமைத்தார். பாடல் வரிகளை ஏ. எம். நடராஜா கவி எழுதினார். பாடல்களை சு. ராஜம், காந்திமதி மற்றும் ஜிக்கி ஆகியோர் பாடினர். இப்படத்தில் இடம்பெற்ற "வரப்போற மாப்பிள்ளை முறுக்குவன் மீசைய" பாடல் பிரபலமானது. இந்தப் பாடலின் மெட்டானது படி பேஹ்ன் என்ற இந்தித் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மெட்டு ஆகும்.[4]

எண். பாடல் பாடகர்/கள் வடிகள் நீளம் (நி.மி:நொ)
1 "பாழும் அடுப்பை ஊதி ஊதி பக்கமெல்லாம் நோவுது" சு. ராஜம், காந்திமதி ஏ. எம். நடராஜா கவி 02:59
2 "நாதோ பாசனையே நரருக்கே" சு. ராஜம் 03:24
3 "வரப்போற மாப்பிள்ளை முறுக்குவன் மீசைய" ஜிக்கி 03:28
4 "கோகில கண்டதின் கானமே கேட்டு" சு. ராஜம், Ganthimathi 03:56
5 "ஆனந்த பரமானந்தமே" காந்திமதி 03:07
6 "கனவினிலே கைய் பிடித்த" காந்திமதி 03:07
7 "காட்டு வழி" காந்திமதி 02:46
8 "ஓரமாக போய்" சு. ராஜம் 03:09
9 "சுகிர்த நகை செய்யும்" காந்திமதி 02:10
10 "ஜோதியாய் தருக நீ" சு. ராஜம் 03:19

வெளியீடு

ராஜ விக்கிரமா 1950 நவம்பர் 29 அன்று வெளியானது. தமிழில் இப்படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கன்னடத்தில் வெற்றியை ஈட்டியது.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ராஜ_விக்கிரமா&oldid=37083" இருந்து மீள்விக்கப்பட்டது