பாங்கர் நிமித்தம்
Jump to navigation
Jump to search
பாங்கர் நிமித்தம் 12 மணமக்களுக்குப் பாங்காயினோர் கூட்டிவைக்கும் திருமண வகை 12 எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதனை உரையாசிரியர் இளம்பூரணர் விரித்துரைக்கிறார்.[1]
பிரமம், பிரசாத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்கும் பெருந்திணை. [2]
அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும் கைக்கிளை. [3]
இடையில் உள்ள யாழோர் கூட்டம் (காந்திருவம்) 5 வகை.
- களவில்
- களவு (தோழி உதவி)
- உடன்போக்கு (தோழி உதவி)
- கற்பில்
- இற்கிழத்தி (தூண்டுபவர்)
- காமக்கிழத்தி (தூண்டுபவர்)
- காதற்பரத்தை (தூண்டுபவர்)
என்பன. இந்த ஐந்தும் தமிழ் இலக்கியங்களில் பயின்றுவரும்.
இந்த உறவுகள் ஏதோ ஒன்றிரண்டு நிமித்தக் காரணங்களினால் பிறர் தூண்டுதலின் பேரில் நிகழ்பவை.