தொகுப்பு முப்புள்ளி (தமிழ் நடை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
‌...
தொகுப்பு முப்புள்ளி (தமிழ் நடை)
நிறுத்தக்குறிகள்
தனி மேற்கோள் குறி ( ’ ' )
அடைப்புக் குறிகள் ( [ ], ( ), { }, ⟨ ⟩ )
முக்காற்புள்ளி ( : )
காற்புள்ளி ( , )
இணைப்புக்கோடு ( , –, —, ― )
முப்புள்ளி ( …, ..., . . . )
உணர்ச்சிக்குறி ( ! )
முற்றுப்புள்ளி ( . )
கில்லெமெட்டு ( « » )
இணைப்புச் சிறு கோடு ( )
கழித்தல் குறி ( - )
கேள்விக்குறி ( ? )
மேற்கோட்குறிகள் ( ‘ ’, “ ”, ' ', " " )
அரைப்புள்ளி ( ; )
சாய்கோடு ( /,  ⁄  )
சொற்பிரிப்புகள்
வெளி ( ) ( ) ( )
மையப் புள்ளி ( · )
பொது அச்சுக்கலை
உம்மைக் குறி ( & )
வீதக் குறி ( @ )
உடுக்குறி ( * )
இடம் சாய்கோடு ( \ )
பொட்டு ( )
கூரைக் குறி ( ^ )
கூரச்சுக் குறி ( †, ‡ )
பாகைக் குறி ( ° )
மேற்படிக்குறி ( )
தலைகீழ் உணர்ச்சிக் குறி ( ¡ )
தலைகீழ் கேள்விக் குறி ( ¿ )
எண் குறியீடு ( # )
இலக்கக் குறியீடு ( )
வகுத்தல் குறி ( ÷ )
வரிசையெண் காட்டி ( º, ª )
விழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு ( %, ‰, )
பத்திக் குறியீடு ( )
அளவுக் குறி ( ′, ″, ‴ )
பிரிவுக் குறி ( § )
தலை பெய் குறி ( ~ )
அடிக்கோடு ( _ )
குத்துக் கோடு ( ¦, | )
அறிவுசார் சொத்துரிமை
பதிப்புரிமைக் குறி ( © )
பதிவு செய்யப்பட்ட வணிகக் குறி ( ® )
ஒலிப் பதிவுப் பதிப்புரிமை ( )
சேவைக் குறி ( )
வர்த்தகச் சின்னம் ( )
Currency
நாணயம் (பொது) ( ¤ )
நாணயம் (குறிப்பிட்ட)
( ฿ ¢ $ ƒ £ ¥ )
பிரபல்யமற்ற அச்சுக்கலை
மூவிண்மீன் குறி ( )
டி குறி ( )
செங்குத்துக் குறியீடு ( )
சுட்டுக் குறி ( )
ஆகவே குறி ( )
ஆனால் குறி ( )
கேள்வி-வியப்புக் குறி ( )
வஞ்சப்புகழ்ச்சிக் குறி ( ؟ )
வைர வடிவம் ( )
உசாத்துணைக் குறி ( )
மேல்வளைவுக் குறி ( )
சம்பந்தப்பட்டவை
இரட்டைத் திறனாய்வுக் குறிகள்
வெள்ளை இடைவெளி வரியுரு
ஏனைய வரி வடிவங்கள்
சீன நிறுத்தக்குறி
முப்புள்ளி

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.

இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. இவை பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.

நிறுத்தக்குறிகளுள் புள்ளி என்பது அடிப்படையானது. அது கால்புள்ளி (comma), அரைப்புள்ளி (semicolon), முக்கால்புள்ளி (colon), முற்றுப்புள்ளி (full stop), புள்ளி (point), முப்புள்ளி (ellipsis) என்று வேறுபடுத்தப்பட்டு எழுத்தில் கையாளப்படுகிறது.

முப்புள்ளி (...)

மூன்று புள்ளிகளாலாகிய முப்புள்ளி (ஆங்கிலத்தில் ellipsis; கிரேக்க மூலம்: ἔλλειψις, élleipsis = "விடுபட்டது") கீழ்வருவனவற்றைக் குறிக்கப் பயன்படுகிறது:

  • விடுபட்ட சொல்/சொற்றொடர்
  • நிறுத்தம்
  • சிந்தனைத் தொடர்ச்சி
  • ஒலிப்புத் தொடர்ச்சி
  • உணர்ச்சி நீட்டம்

முப்புள்ளி இடும் இடங்கள்

1) வாக்கியத்தில் விடப்பட்ட பகுதியைக் குறிக்க முப்புள்ளி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
அறையில் குடும்பமே கூடிவிட்டது. அம்மா, அப்பா, அக்கா...
2) நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும்போது வேண்டுமென்றே விடுத்த சொல்/தொடர் ஆகியவற்றைக் குறிக்க முப்புள்ளி இட வேண்டும்.
எடுத்துக்காட்டு:
யாயும் ஞாயும் யாரா கியரோ...செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே (குறுந்தொகை - 40)
3) எழுத்தில் நிறுத்தம் குறிக்க முப்புள்ளி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
கண்ணன் தந்தியைக் கையில் வாங்கியபோதே அவன் நெஞ்சம் படபடத்தது. தந்தியை மெதுவாகப் பிரித்தான். அவன் கண்கள் மங்கின...மயங்கி வீழ்ந்தான்.
4) வாக்கியத்தின் இறுதியில் சிந்தனைத் தொடர்ச்சியைக் குறிக்க முப்புள்ளி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
சிலவேளை அங்கே மும்பையில்கூட அவன் இருக்கலாம்...
5) சொற்களின் ஒலிப்புத் தொடர்ச்சியைக் குறிக்க முப்புள்ளி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
அம்மா, கத்தரிக்காய், கத்தரிக்காய்...
6) உணர்ச்சியை வெளிப்படுத்திம்போது அது இன்னும் தொடர்கிறது என்பதைக் காட்ட முப்புள்ளி இடுவது முறை
மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த தன் தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் பொன்னி மயங்கி வீழ்ந்தாள்...அவள் மூச்சு நின்றுபோனது...

சான்றுகள்

1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.