திருவருணைத் தனிவெண்பா
Jump to navigation
Jump to search
திருவருணைத் தனிவெண்பா என்றும் தனிவெண்பாமாலை என்றும் வழங்கப்படும் [1] தமிழ் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குகை நமச்சிவாயர் இயற்றிய நூல்களில் ஒன்று.[2] அருணை என்பது அண்ணாமலை என்னும் திருவண்ணாமலை.
பாடல் - எடுத்துக்காட்டு
(பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.)
1
- வீடு தரும் சோணகிரி வித்தகனார் சத்தியுடன்
- நீடு தேர் ஏறி அவர் நிற்கின்றார் - ஓடு
- வடம் பிடிக்க வாருங்கள் வந்தவர்க்கு முத்தி
- இடம் கிடைக்கும் பாருங்கள் இன்று.
இந்தப் பாடல் பிற்காலத்தில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய பாடலோடு ஒப்புநோக்கத் தக்கது. [3]
2
- மானமிலி பொய்யன் மனங்கள் இலாத புத்தி
- ஈனன் இவன் என்றும் இகழாதே - ஞான
- உருவே அருணகிரி ஓம் நமசிவாய
- குருவே எனை ஆண்டு கொள்.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 165.
- ↑ இவர் இயற்றிய அருணகிரி வெண்பா அந்தாதி என்னும் நூல் வேறு.
- ↑
- ஒன்றும் அறியாத ஊமர்காள், தென் அரங்கர்
- இன்று திருத்தேரில் ஏறினார் - நின்று
- வடம் பிடிக்க வாருங்கோள் வைகுந்த நாட்டில்
- இடம் பிடிக்க வேண்டுவீர் இங்கு