திருவருணைத் தனிவெண்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவருணைத் தனிவெண்பா என்றும் தனிவெண்பாமாலை என்றும் வழங்கப்படும் [1] தமிழ் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குகை நமச்சிவாயர் இயற்றிய நூல்களில் ஒன்று.[2] அருணை என்பது அண்ணாமலை என்னும் திருவண்ணாமலை.

பாடல் - எடுத்துக்காட்டு

(பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.)

1

வீடு தரும் சோணகிரி வித்தகனார் சத்தியுடன்
நீடு தேர் ஏறி அவர் நிற்கின்றார் - ஓடு
வடம் பிடிக்க வாருங்கள் வந்தவர்க்கு முத்தி
இடம் கிடைக்கும் பாருங்கள் இன்று.

இந்தப் பாடல் பிற்காலத்தில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய பாடலோடு ஒப்புநோக்கத் தக்கது. [3]

2

மானமிலி பொய்யன் மனங்கள் இலாத புத்தி
ஈனன் இவன் என்றும் இகழாதே - ஞான
உருவே அருணகிரி ஓம் நமசிவாய
குருவே எனை ஆண்டு கொள்.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 165. 
  2. இவர் இயற்றிய அருணகிரி வெண்பா அந்தாதி என்னும் நூல் வேறு.
  3. ஒன்றும் அறியாத ஊமர்காள், தென் அரங்கர்
    இன்று திருத்தேரில் ஏறினார் - நின்று
    வடம் பிடிக்க வாருங்கோள் வைகுந்த நாட்டில்
    இடம் பிடிக்க வேண்டுவீர் இங்கு
"https://tamilar.wiki/index.php?title=திருவருணைத்_தனிவெண்பா&oldid=17348" இருந்து மீள்விக்கப்பட்டது