திருவருணை அந்தாதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவருணை அந்தாதி என்னும் நூல் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது. காலம் 16-ஆம் நூற்றாண்டு. அந்தாதி என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று; அருணை என்பது திருவண்ணாமலையைக் குறிக்கும்.

திருவண்ணாமலையின் புகழைப் பாடும் சிற்றிலக்கியங்கள் பல. அவற்றுள் காலத்தால் முந்தியது இந்தத் திருவருணை அந்தாதி. அடுத்து வந்தது அருணகிரி வெண்பா அந்தாதி. இதனை இயற்றியவர் குகை நமச்சிவாயர்.

திருவருணை அந்தாதியில் 100 கட்டளைக்கலித்துறைப் பாடல்களும், இரண்டு காப்புச் செய்யுள்களும் உள்ளன.

எடுத்துக்காட்டுப் பாடல்

சித்தம் இழுக்குறத் தீமையுறார் பெருஞ்செல்வம் அறார்
முத்தமிழுக்கு முதன்மையும் ஆகுவர் முண்டகப் பூங்
கொத்தம் இழுக்கும் வரக்கனி ஊரல் குளிர்நதி பாய்
நத்தம் இழுக்கும் மயல் அருணேசரை நத்தினாரே. [1]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005

அடிக்குறிப்பு

  1. பாடல் 32, இந்தக் கட்டளைக் கலித்துறை பொருள் விளங்கும்படி பிரித்துப் பதியப்பட்டுள்ளது.
"https://tamilar.wiki/index.php?title=திருவருணை_அந்தாதி&oldid=16757" இருந்து மீள்விக்கப்பட்டது