திரிசிரன்
Jump to navigation
Jump to search
திரிசிரன் அல்லது முத்தலையன் (ஆங்கிலம்: Trishira அல்லது Trisiras, சமக்கிருதம்: त्रिसिर) அசுரர் குல மன்னரும் இலங்கை வேந்தனுமான இராவணனின் ஏழு மகன்களில் ஒருவர் ஆவார். மூன்று தலைகள் கொண்டவன் என்பதால் இவன் திரிசிரஸ் என அழைக்கப்பட்டான். இவனது மற்ற சகோதரர்கள் முறையே இந்திரஜித், பிரகஸ்தன், அதிகாயன், அட்சயகுமாரன் மற்றும் நராந்தகன் - தேவாந்தகன் (இரட்டையர்) ஆவார்.
இராமகாதையின் யுத்த காண்டத்தில், அனுமானின் தாக்குதலுக்கு இலக்காகி, திரிசிரனின் மூன்று தலைகளும் கொய்யப்பட்டது.[1]
மேற்கோள்கள்
- ↑ "Trishira" இம் மூலத்தில் இருந்து 2016-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161107203647/http://www.valmikiramayan.net/aranya/sarga27/aranya_27_prose.htm.