தத்தனேரி
தத்தனேரி Thathaneri | |
---|---|
ஆள்கூறுகள்: 9°56′30″N 78°06′26″E / 9.941800°N 78.107100°ECoordinates: 9°56′30″N 78°06′26″E / 9.941800°N 78.107100°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 162 m (531 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625018 |
தொலைபேசி குறியீடு | 0452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, செல்லூர், கோரிப்பாளையம், விளாங்குடி, ஆரப்பாளையம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | பழனிவேல் தியாகராஜன் |
இணையதளம் | https://madurai.nic.in |
தத்தனேரி (Thathaneri) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். தத்தனேரியில் கண்மாய் ஒன்று அமையப்பெற்று தத்தனேரிக்கும் அதன் அண்மைய ஊர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.[1]
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 162 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தத்தனேரி ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 9°56'30.5"N, 78°06'25.6"E (அதாவது, 9.941800°N, 78.107100°E) ஆகும்.
அருகிலுள்ள ஊர்கள்
மதுரை, செல்லூர், கோரிப்பாளையம், விளாங்குடி மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை தத்தனேரிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.
போக்குவரத்து - சாலைப் போக்குவரத்து
தத்தனேரியில் நான்கு வழிச் சாலை ஒன்று உள்ளது. கோரிப்பாளையம் பகுதி வழியாக தத்தனேரி நான்கு வழிச் சாலையை அடைய, செல்லூர் இரயில்வே மேம்பாலத்தின் இடது பக்கத்தில் கீழ்மட்ட சாலை ஒன்று சுமார் ரூ.9.50 கோடி செலவில் உருவாகிறது.[2] மதுரை மாநகராட்சி பேருந்து சேவைகள் மூலம் தத்தனேரி பயனடைகிறது. தத்தனேரியிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலேயே மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அமையப்பெற்றுள்ளது. மேலும், இங்கிருந்து சுமார் 3.5 கி.மீ. தூரத்தில், மதுரையின் நடுப்பகுதியில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மற்றும் சுமார் 4.5 கி.மீ. தொலைவில் மதுரை - அண்ணா நகர் பேருந்து நிலையம் உள்ளது. மேலும், மாட்டுத்தாவணியிலுள்ள மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தொடங்கி, அண்ணா பேருந்து நிலையம், செல்லூர், தத்தனேரி வழியாக பாத்திமா கல்லூரி வரை 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் புதிய போக்குவரத்து சேவை நடைபெறுகிறது.[3]
தொடருந்து போக்குவரத்து
தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், தத்தனேரியிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.
வான்வழிப் போக்குவரத்து
தத்தனேரியிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில், மதுரை வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
மருத்துவம்
தத்தனேரியில் தொழிலாளர் நல மாநில ஈட்டுறுதி (இ. எஸ். ஐ.) மருத்துவமனை ஒன்று உள்ளது.[4]
மயானம்
தத்தனேரி, செல்லூர், கோரிப்பாளையம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் பயனடைய, தத்தனேரியில் மயானம் ஒன்று உள்ளது.[5] எரிவாயு மூலம் செயல்படும் இரண்டு எரிவாயு ஆலைகள் கொண்ட இந்த மயானம்,[6] பழமை வாய்ந்தது.
அரசியல்
தத்தனேரி பகுதியானது, மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் பழனிவேல் தியாகராஜன். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
- ↑ "கிடப்பில் கான்கிரீட் கால்வாய் திட்டம் - Dinamalar Tamil News" (in ta). 2022-12-09. https://m.dinamalar.com/detail.php?id=3189811.
- ↑ Sundar, S. (2022-09-27). "Sellur Rail over bridge in Madurai to get new arm" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Madurai/sellur-rail-over-bridge-in-madurai-to-get-new-arm/article65941246.ece.
- ↑ The Hindu Bureau (2022-11-17). "New bus services flagged off from Mattuthavani" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Madurai/new-bus-services-flagged-off-from-mattuthavani/article66150537.ece.
- ↑ தினத்தந்தி (2022-12-08). "இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு" (in ta). https://www.dailythanthi.com/News/State/esi-minister-of-labor-welfare-conducts-surprise-inspection-in-hospitals-853308.
- ↑ Narayani, P. A. (2020-07-10). "With deaths mounting, gasifiers run non-stop" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/with-covid-19-deaths-mounting-madurai-needs-more-crematoriums/article32043987.ece.
- ↑ Staff Reporter (2021-05-13). "Madurai crematoriums to have three more gasifiers" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Madurai/madurai-crematoriums-to-have-three-more-gasifiers/article34551415.ece.