ஜார்ஜ் மரியன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜார்ஜ் மரியன்
பிறப்புஎம். ஏ. ஜார்ஜ் மரியான்
23 மார்ச் 1963
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
மற்ற பெயர்கள்ஜியார்ஜ்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002 – தற்போது வரை

ஜார்ஜ் மரியன் (George Maryan, பிறப்பு 23 மார்ச் 1963) என்பவர் ஒரு இந்திய நடிகரும் நகைச்சுவையாளருமாவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவருகிறார். தமிழ் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு நாடகத்துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர், திரைப்பட படைப்பாளிகளான ஏ. எல். விஜய், சுந்தர் சி. , பிரியதர்சன் ஆகியோரின் படங்ளில் பெரும்பாலும் நடித்துள்ளார்.[1]

தொழில்

ஜார்ஜ் மரியன் 1989 ஆம் ஆண்டு நாடக நடிகராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 2002 வரை நாடகங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். அதன்பிறகு, இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்ககத்துவங்கினார். இவர் பெரும்பாலும் துணை வேடங்களில், நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.[1] பிரியதர்சன் காஞ்சிவரம் (2008) திரைப்படத்தில் கலகலப்பான காவல்துறை அதிகாரியாக நடித்த பின்னர் ஜார்ஜ் தமிழ் படங்களில் ஒரு நடிகராக முன்னேற்றம் அடைந்தார். இயக்குநர் ஏ. எல். விஜய் நாடகத்தில் இவரின் நடிப்பால் ஈர்க்கப்பட்டார்.[2] விஜய் பின்னர் ஜார்ஜை தனது சொந்த படமான பொய் சொல்லப் போறோம் (2008) படத்தில் நடிக்க வைத்தார். மேலும் இவருக்கு மதராசபட்டினத்தில் (2010) ஆங்கில ஆசிரியராகவும், தெய்வத் திருமகளில் (2011) மனவளர்ச்சிக் குறைபாடு கொண்ட நபராகவும் படிப்படியாக பெரிய பாத்திரங்களை வழங்கினார். ஏ. எல். விஜயின் சைவம் (2014) படத்தில் வீட்டு வேலைக்காரராக இவர் வகித்த பாத்திரம் இவருக்கு விமர்சன ரீதியான பாராட்டை பெற்றுத் தந்தது, தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சகர் ஜார்ஜ் "நன்கு நடித்தார்" என்று கூறினார்.[3] அதேபோல், டெக்கான் குரோனிக்கலின் விமர்சகர் இவர் "தனது இயல்பான நடிப்பால் பிரகாசிக்கிறார்" என்று குறிப்பிட்டார், அதே போல தி இந்துவின் பரத்வாஜ் ரங்கனும் இவரது நடிப்பைப் பாராட்டினார்.[4][5] ஜார்ஜ் சுந்தர் சி. யின் , ஆம்பள , கலகலாப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் கைதி (2019) படத்தில் காவலராக நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்.[6]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

வலைத் தொடர்

ஆண்டு நிகழிச்சியின் பெயர் பாதரம் வலைப்பின்னல் குறிப்புகள்
2020 டைம் என்ன பாஸ் ஆலவாயன் அமேசான் பிரைம் [7]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தேதி விருது வகை படம் முடிவு Ref.
2020 ஜீ சினி விருதுகள் தமிழ் சிறந்த துணை நடிகர் - ஆண் கைதி Won [8]
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சிறந்த துணை நடிகர் - ஆண் Won [9]

குறிப்புகள்

 

  1. 1.0 1.1 "M.A.George Mariyaan | Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". http://www.nadigarsangam.org/member/m-a-george-mariyaan/. 
  2. ""The Difference between Santhanam and Goundamani" - 'Kalakalappu2' George - Tamil News". 17 February 2018. https://www.indiaglitz.com/kalakalappu2-actor-george-exclusive-interview-news--tamil-news-207114. 
  3. "Saivam Movie Review {3.5/5}: Critic Review of Saivam by Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/saivam/movie-review/37338588.cms. 
  4. Rangan, Baradwaj (28 June 2014). "Saivam: Something to crow about". https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/saivam-something-to-crow-about/article6158097.ece. 
  5. subramanian, anupama (27 June 2014). "Movie review ‘Saivam’: Is an inspiring feel good family drama". https://www.deccanchronicle.com/140627/entertainment-movie-review/article/movie-review-%E2%80%98saivam%E2%80%99-inspiring-feel-good-family-drama. 
  6. https://www.sify.com/movies/george-maryan-elated-after-kaithi-reviews-bags-role-in-indian-2-news-tamil-tk4k44bfeiieh.html
  7. "Time Enna Boss trailer: A fun Tamil series about time travel" (in en). 2020-09-15. https://indianexpress.com/article/entertainment/web-series/time-enna-boss-trailer-a-fun-tamil-sitcom-about-time-travel-6596868/. 
  8. "Zee Cine Awards Tamil 2020 winners list: Ajith, Kamal Haasan, Dhanush won these honours". 2020-01-05. https://www.ibtimes.co.in/zee-cine-awards-tamil-2020-winners-list-ajith-kamal-haasan-dhanush-won-these-honours-811280. 
  9. "Vikatan Awards 2019: Taapsee Pannu wins ‘Best Actor’ for Game Over, shares surreal moment with Dhanush and Vetrimaaran". 12 January 2020. https://www.thestatesman.com/entertainment/bollywood/vikatan-awards-2019-taapsee-pannu-wins-best-actor-game-shares-surreal-moment-dhanush-vetrimaaran-1502844173.html. 
"https://tamilar.wiki/index.php?title=ஜார்ஜ்_மரியன்&oldid=22188" இருந்து மீள்விக்கப்பட்டது