அம்மணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அம்மணி
இயக்கம்லட்சுமி ராமகிருஷ்ணன்
தயாரிப்புவெண் கோவிந்தா
கதைலட்சுமி ராமகிருஷ்ணன்
இசைகே
நடிப்புலட்சுமி ராமகிருஷ்ணன்
சுப்பலட்சுமி
நிதின் சத்யா
ஒளிப்பதிவுஇம்ரான் அகமது கே. ஆர்
படத்தொகுப்புகே. ஆர். ரெஜித்
கலையகம்டேக் என்டர்டெயின்மென்ட்
வெளியீடு14 அக்டோபர் 2016 (2016-10-14)
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அம்மணி (Ammani) என்பது அக்டோபர் 14,2016இல் வெண் கோவிந்தா தயாரிப்பில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]. இப்படத்தில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், சுப்பலட்சுமி, நடிகர் நிதின் சத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்

தயாரிப்பு

இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் வந்த ஒரு பெண்ணை சந்தித்த இவர் அப்பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக்கி ஒரு திரைப்படமாக இயக்கினார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி லட்சுமி ராமகிருஷ்ணனுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர்கள் ரோபோ சங்கரும் நிதின் சத்யாவும் இப்படத்தில் இணைந்தனர். 2015ஆம் ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கப்பட்டது.[2].

இப்பட தயாரிப்பு ஜூலை 2015 அன்று முடிந்த நிலையில் செப்டம்பர் 2015ல் பட முன்னோட்டத்தை வெளியிட்டனர். திரைப்பட வெளியிடும் விழா குவைத்தில் நடைபெற்றது[3]. இப்படத்தின் மற்றொரு பட முன்னோட்டத்தை துபாயில் வெளியிட்டனர். முதலில் 2015 தீபாவளியன்று இப்படம் திரையிட அறிவிக்கப்பட்டனர் பின்னர் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்படம் 2016ல் வெளியிடப்பட்டது.

ஒலிப்பதிவு

இப்படத்திற்கு பிண்ணணி இசையும் பாடல்களும் கே இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பாடல்களை பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இயற்றியுள்ளார். இப்படத்தின் நான்கு பாடல்களைக் கொண்ட நிலையில் அக்டோபர் 7, 2016ல் பாடல்களை வெளியிடப்பட்டது.

சிஃபி.காம் "இப்பட பாடல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது" என்று பாராட்டியது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா "கே நன்கு முயற்சி எடுத்து இசையமைத்துள்ளார்" என்றது.[4]" எனவும் பாராட்டியது.

வரவேற்பு

இப்படம் மகிழ்ச்சியான வரவேற்பை ஏற்படுத்தியது. சிஃபி.காம் "இப்படம்சமுதாயத்திற்கு நன்கு கருத்துரைத்தது" எனவும் "இப்படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நன்றாக இயக்கி முக்கிய கதாப்பாத்திரத்தில் மிகவும் நன்றாக நடித்துள்ளார்" எனவும் பாராட்டியது[5].

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அம்மணி&oldid=30083" இருந்து மீள்விக்கப்பட்டது