சொரூபசாரம்
சொரூபசாரம் என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. சொரூபானந்தர், தத்துவராயர் எனபவரின் குரு. நூலின் பெயருக்கும் சொரூபானந்தர் பெயருக்கும் உள்ள சொல் ஒப்புமையைக் கருத்தில் கொண்டு இந்த நூல் சொரூபானந்தரால் செய்யப்பட்டது எனக் கூறலாயினர். சொரூபானந்தர் எந்த நூலும் செய்யவில்லை. தம் மாணாக்கர் தத்துவராயரைக் கொண்டே பல நூல்களை உருவாக்கினார். எனவே இந்த நூல் சொருபானந்தரால் செய்யப்படவில்லை என்பது மு. அருணாசலம் கருத்து.
இந்த நூலில் 100 வெண்பாக்கள் உள்ளன. இவை நல்ல எளிய நடையில் உள்ளன. அவற்றிலிருந்து இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாக இங்குத் தரப்படுகின்றன. [1]
எங்கும் பொதுவாக இருக்கும் ஒரு சீவன் முத்தர்
தங்கும் இடம்தானே தலவாசல் – அங்கு அவர்கள்
பார்வையே தீர்த்தம் அவர் பாதாரவிந்த [2] மலர்ச்
சேவையே சாயுச்சயம் [3]
மெத்தென்ற சொல்லும் விருப்பம் அற்ற நோக்கும் எலாம்
சத்து என்ற நெசம் தளர் நடையும் - சித்தத்து
அடங்கா மகிழ்வும் அனவரதம் [4] பெற்றால்
திடந்தானே ஞானி செயல்.
கருவிநூல்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005