சின்னத்தாயி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சின்னத்தாயி
இயக்கம்கணேஷ்ராஜ்
தயாரிப்புவேதா
கதைகணேசாராஜ்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுவிஷ்வம் நட்ராஜ்
படத்தொகுப்புசீனிவாஷ் கிருஷ்ணன்
கலையகம்எம்.எஸ்.ஆர். பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 1, 1992 (1992-02-01)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்னத்தாயி என்பது 1992 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். எஸ். கணேஷ் இயக்கியிருந்தார். விக்னேஷ் மற்றும் பத்மசிறீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வேதா இப்படத்தை தயாரித்துள்ளார்.

இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் 1 பிப்ரவரி 1992 இல் வெளிவந்தது.[1].

நடிகர்கள்

கதைச்சுருக்கம்

நகரத்தில் படிப்பை முடித்த பொன்ராசு (விக்னேஷ்) தன் கிராமத்திற்கு திரும்புகிறான். பொன்ராசுவின் தந்தை வீரமுத்து நாய்க்கர் (வினு சக்ரவர்த்தி). அவர் சுடலை மாட சாமியாக ஊரை சுற்றிவரும் பொழுது, அவர் எதிரில் யார் வந்தாலும் கொன்றுவிடுவார். கிராமப் பெண்ணான சின்னத் தாயியை (பத்மாஸ்ரீ) சிறு வயதிலிருந்தே பொன்ராசு விரும்பு வருகிறான். பொன்ராசு மீதும் சின்னத் தாயிக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு.

அந்த ஜோடியின் காதலை சின்னத் தாயியின் தாய் ராசம்மா (சபிதா ஆனந்த்) ஏற்றுக்கொள்ளவில்லை. தான் சிறுவயதில் ஒரு பாடகரால் ஏமாற்றப்பட்ட நிலை தன் மகளான சின்னத் தாயிக்கு ஏற்படக்கூடாது என்று எண்ணுகிறாள் ராசம்மா. சாமுண்டியின் (நெப்போலியன்) இரண்டாவது மனைவி தான் ராசம்மா.

ராசம்மா சின்னத் தாயியை பொன்ராசுவை மறந்துவிடுமாறு வலியுறுத்துகிறாள். தொடக்கத்தில் பொன்ராசுவை தவிர்த்தாலும், பின்னர் இருவரும் மிகவும் நெருக்கமாக, சின்னத் தாயி கருவுருகிறாள். அவ்வாறாக, வீரமுத்து சாமியாடி ஊரைச்சுற்றி வரும் பொழுது, அவர் எதிரில் ராசம்மா தோன்றி காதல் கர்ப்பம் பற்றி உண்மையை கூறுகிறாள். அதிர்ந்து போன வீரமுத்து, ராசம்மாவை கொல்லாமல் விடுகிறார். அச்செயலை கிராம மக்கள் கெட்ட சகுனமாக கருதினர். பின்னர், பொன்ராசுவிற்கு புத்திமதி சொல்லி, நகரத்திற்கு அவனின் பெற்றோர் அனுப்பிவிடுகிறார்கள்.

அவ்வாறாக ஒரு நாள், சாமுண்டி சின்னத் தாயியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது, ராசம்மாவை கொன்றுவிடுகிறான். பஞ்சாயத்தில், வீரமுத்து சாமுண்டியை கோவிலுக்கு கப்பம் கட்ட உத்தரவிட்டு, தன் மகனின் செயலை மூடி மறைக்கிறார். சின்னத் தாயி போலீசில் புகார் தர, சாமுண்டியை கைது செய்ய முயற்சிக்கிறார் சங்கரபாண்டியன் (ராதா ரவி). மாறாக வீரமுத்துவை கைது செய்யும் நிலை ஏற்படுகிறது. மீண்டும் ஊர் திரும்பிய பொன்ராசு, புதிய சாமியாடியாகி ஊரை சுற்றிவரும் பொழுது, குழந்தையுடன் அவன் முன் வந்து நிக்கிறாள் சின்னத் தாயி. சின்னத் தாயிக்கு என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[2][3] இப்படத்தின் "கோட்டைய விட்டு" என்ற பாடல் மாயாமாளவகௌளை இராகத்தில் அமைக்கப்பட்டது.[4]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"அரும்பரும்பா சரம் தொடுத்து" பி. சுசீலா 5:17
"ஆறுமுக மங்கலத்தில்" குழுவினர் 1:15
"கோட்டைய விட்டு வேட்டைக்கு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1:17
"கோட்டைய விட்டு வேட்டைக்கு" எஸ். ஜானகி 5:02
"கோட்டைய விட்டு " உமா ரமணன், கல்பனா 5:02
"நான் ஏரிக்கரை மேலிருந்து" கே. ஜே. யேசுதாஸ், சுவர்ணலதா 5:08
"நான் ஏரிக்கர மேலிருந்து" இளையராஜா 4:58
"நான் இப்போதும் எப்போதும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:55

வரவேற்பு

நல்ல விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் 100 நாட்களுக்கு ஓடியது.[5][6]

ஆதாரங்கள்

  1. "Chinna Thaai (1992) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/chinna-thaai/. பார்த்த நாள்: 2014-02-27. 
  2. "Chinna Thayee (1992)" இம் மூலத்தில் இருந்து 28 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140228105620/http://www.raaga.com/channels/tamil/album/T0001558.html. 
  3. "Chinna Thayee" (in en-US). 21 August 2022 இம் மூலத்தில் இருந்து 17 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240217090015/https://isaishop.com/product/shop/digital-albums/ilaiyaraaja/chinna-thayee/. 
  4. ஜி.ராமானுஜன், டாக்டர் (1 சூன் 2018). "ராக யாத்திரை 07: மாரியம்மனும் மரிக்கொழுந்தும்" (in Ta) இம் மூலத்தில் இருந்து 19 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221019035612/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/131917-07.html. 
  5. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920214&printsec=frontpage. 
  6. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சின்னத்தாயி&oldid=33397" இருந்து மீள்விக்கப்பட்டது