கோ. கேசவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோ. கேசவன்
பிறந்ததிகதி 5 அக்டோபர் 1946
பிறந்தஇடம் மதுரை,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு 16 செப்டம்பர் 1998(1998-09-16) (அகவை 51)
பணி எழுத்தாளர், இதழாளர், தமிழ்ப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், மார்க்சிய அறிஞர், ஆய்வாளர், சமூகச் செயற்பாட்டாளர்
தேசியம் தமிழர்
குடியுரிமை இந்தியர்
கல்வி நிலையம்
கருப்பொருள் மார்க்சியம், சமூகவுடைமை, திராவிடம், தலித்தியம், நாட்டுப்புறவியல்
இலக்கிய இயக்கம்

CPI-M-flag.svg இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

இணையதளம் https://www.kesavans.com/

கோ. கேசவன் (5 அக்டோபர் 1946 - 16 செப்டம்பர் 1998) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், இதழாளர், தமிழ்ப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், மார்க்சிய அறிஞர், ஆய்வாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஆவார்.

தொடக்க வாழ்க்கை

மதுரை மாநகரில் 5 அக்டோபர் 1946 அன்று பொன்னம்மாள்-கோவிந்தன் இணையருக்குப் பிறந்தார் கேசவன்.

தொடக்கக் கல்வியை பரிதிமாற் கலைஞர் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை சேதுபதி மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியிலும், பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு ஆகியவற்றை மதுரை தியாகராசர் கல்லூரியிலும் முடித்தார். சி. சுப்பிரமணிய பாரதியார் படைப்புகளில் அரசியல் பின்னணி என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்

அரசுப்பணி

கல்வியை நிறைவு செய்தபின் தமிழ்நாட்டுத் தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத் துறையில் மொழிபெயர்ப்பாளராகச் சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் திருச்சிராப்பள்ளி அரசினர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இயக்கப் பணி

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றினார்.

நூல்கள்

ஆண்டு தலைப்பு பதிப்பகம் இடம்
1979 மண்ணும் மனித உறவுகளும் சென்னை புக் ஹவுஸ் சென்னை
1981 பள்ளு இலக்கியம்: ஒரு சமூகவியல் பார்வை அன்னம் (பி) லிட் சிவகங்கை
1982 இயக்கமும் இலக்கியப் போக்குகளும் சென்னை புக் ஹவுஸ் சென்னை
1984 இலக்கிய விமர்சனம் - ஒரு மார்க்சியப் பார்வை அன்னம் (பி) லிட் சிவகங்கை
1985 கதைப்பாடல்களும் சமூகமும் தோழமை வெளியீடு கும்பகோணம்
இந்திய தேசியத்தின் தோற்றம் சிந்தனையகம் சென்னை - 17
1986 நாட்டுப்புறவியல் - ஒரு விளக்கம் புதுமைப் பதிப்பகம் திருச்சிராப்பள்ளி
மார்க்சியத் திறனாய்வுச் சிக்கல்கள் மதுரை
புதியக் கல்விக் கொள்கை பு.ப. இயக்கம்
1987 புராணச் சார்புக் கதைப்பாடல்களில் ஆண்-பெண் உறவுநிலை புதுமைப் பதிப்பகம் திருச்சிராப்பள்ளி
நாட்டுப்புறவியல் கட்டுரைகள்
சோசலிச கருத்துகளும் பாரதியாரும்[1] ரசனா புக் ஹவுஸ் சென்னை
1988 பொதுவுடைமை இயக்கமும் சிங்காரவேலரும் (1921-1934) சரவணபாலு பதிப்பகம் விழுப்புரம்
தமிழ்ச் சிறுகதைகளில் உருவம் அன்னம் (பி) லிட் சிவகங்கை
1990 சோசலிசமும் முதலாளிய மீட்சியும் புதுமைப் பதிப்பகம் திருச்சிராப்பள்ளி
ரசியப் புரட்சி ஒரு மாயையா?
சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும் சரவணபாலு பதிப்பகம் விழுப்புரம்
இட ஒதுக்கீடு
1991 திராவிட இயக்கமும் மொழிக் கொள்கையும் செல்மா பதிப்பகம் சிவகங்கை
பாரதியும் அரசியலும் அலைகள் வெளியீட்டகம் சென்னை -24
1994 சமூகவிடுதலையும் தாழ்த்தப்பட்டோரும் சரவணபாலு பதிப்பகம் விழுப்புரம்
1995 தாழ்த்தப்பட்டோர் இலக்கியம் பஃறுளி பதிப்பகம் சென்னை -5
அம்பேத்கரிசம் - ஆளும் வர்க்கச் சித்தாந்தமா? சரவணபாலு பதிப்பகம் விழுப்புரம்
திராவிட இயக்கத்தில் பிளவுகள் அலைகள் வெளியீட்டகம் சென்னை -24
சாதியம் சரவணபாலு பதிப்பகம் விழுப்புரம்
1997 குணா: பாசிசத்தின் தமிழ்வடிவம்

(இணையாசிரியர்: அ. மார்க்ஸ்)

மக்கள் கல்வி இயக்கம் திண்டிவனம்
விடியல் பதிப்பகம் கோயம்புத்தூர்
கோவில் நுழைவுப் போராட்டங்கள் சரவணபாலு பதிப்பகம் விழுப்புரம்
1998 தலித் இலக்கியம் - சில கட்டுரைகள் புதுமைப் பதிப்பகம் திருச்சிராப்பள்ளி
பாரதி முதல் கைலாசபதி வரை அகரம் கும்பகோணம்
தமிழ்: மொழி, இனம், நாடு அலைகள் வெளியீட்டகம் சென்னை -24
தலித் அரசியல் சரவணபாலு பதிப்பகம் விழுப்புரம்
அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும்
முனைவர் கோ. கேசவன் கட்டுரைகள்
2001 நமது இலக்குகள்

மொழிபெயர்ப்புகள்

பாரதியார் குறித்த ஆவணத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும், பிரித்தானிய மார்க்சிய ஆய்வாளர் ஜார்ஜ் தாம்சனின் The Human Essence: The sources of science and art (1974) என்ற நூலை, ‘மனித சமூக சாரம்’ என்ற தலைப்பிலும், மாரிஸ் கார்ன்போர்த்தின் லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள், இயக்கவியல் பொருள்முதல்வாதம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.

இதழியல்

சமரன், செந்தாரகை, தோழமை, மக்கள் தளம் ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் இணைந்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் மக்கள் பண்பாடு, மனஓசை, புலமை, பாலம், கவி, கனவு, மறை அருவி, தோழமை, நிறப்பிரிகை, புதியன, இலக்கு, சிந்தனையாளன், பனிமலர் ஆகிய இதழ்களிலும் கட்டுரைகளை எழுதினார்.

கேசவன் ஆய்வுமுறை

கேசவனின் ஆய்வுமுறை என்பது மார்க்சிய இயங்கியல் பொருள்முதல்வாத வழிப்பட்டது.

"சமூக உற்பத்தி முறைதான் எல்லாவகையான சமூக உணர்வுகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை ஆகும். இந்தப் பொருளாதார அமைப்பே அடித்தளம் எனப்படுகிறது."

"தத்துவ இயல், மதம், அறிவியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை, போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்பத் தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.”

"அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்பிற்கும் இடையே ஒன்றோடொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பைத் தோற்றுவிக்கும் காரணமாகவும் அமைகிறது. ஆகவே சமூக அடித்தளத்திற்கு ஒத்த மேல் கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை மேற்கட்டுமானம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்று பொருள் கொள்ளக்கூடாது. அடித்தளம், மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்றுதான் மார்க்சியம் கூறுகிறது." இதுவே மார்க்சிய வழிப்பட்ட கோ.கேசவனின் ஆய்வுமுறை.

பதவிகள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டத்தின் நடுவராகவும் செயல்பட்டார்.[2]

மறைவு

16 செப்டம்பர் 1998 அன்று மாரடைப்பால் தன் 52-ஆம் பிறந்தநாளுக்கு 18 நாள்கள் முன்னதாகவே மறைந்தார் கேசவன்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோ._கேசவன்&oldid=25862" இருந்து மீள்விக்கப்பட்டது