மனஓசை (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மனஓசை 1981 முதல் 1991 வரை தமிழில் வெளிவந்த இடதுசாரி இயக்க இலக்கிய இதழ். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி) என்னும் மார்க்சிய-லெனினியக் கட்சியின் கலை இலக்கிய மக்கள் திரள் அமைப்பான 'மக்கள் கலாச்சாரக் கழகம்' இந்த இதழை நடத்தியது. பத்து ஆண்டுகளாகச் செயல்பட்ட இவ்விதழுக்கு நிரந்தரமாய் ஓர் ஆசிரியர் குழு தொடரவில்லை. ஆசிரியர் குழுவின் சேர்மானம் குறைந்தும் கூடியும் தொடர்ந்தது. ஆரம்பம் முதல் பங்கேற்றவர் சூரியதீபன் என்கிற பா. செயப்பிரகாசம் ஆவார். நீண்ட காலமாக ஆசிரியர் குழுவில் சுரேஷ் என்கிற பேராசிரியர் சீனிவாசன், வசந்தன், சங்கர் என்கிற திருஞானம், இளமுருகு என்கிற பெருமாள்முருகன் ஆகியோர் அங்கம் வகித்தனர். 1970களின் பிற்பாதியில் மனஓசை என்னும் பெயரில் இதழைத் தொடங்கி நடத்தியவர் முல்லை அம்பரீடன் என்பவர் ஆவார். அவரிடம் அனுமதி பெற்று மக்கள் கலாச்சாரக் கழகம் இப்பெயரைப் பயன்படுத்திக் கொண்டது.[1]

சான்றுகள்

  1. மனஓசை இதழ்த் தொகுப்பு-கட்டுரைகள், சூரியதீபன், தோழமை வெளியீடு, சென்னை, டிசம்பர் 2009
"https://tamilar.wiki/index.php?title=மனஓசை_(இதழ்)&oldid=17723" இருந்து மீள்விக்கப்பட்டது