காயத்ரி (திரைப்படம்)
காயத்ரி | |
---|---|
இயக்கம் | ஆர். பட்டாபிராமன் |
தயாரிப்பு | விஜய மீனா |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ஜெய்சங்கர் ஸ்ரீதேவி |
வெளியீடு | அக்டோபர் 7, 1977 |
நீளம் | 3560 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காயத்ரி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் சுஜாதா எழுதிய காயத்ரி என்ற புதினத்தின் கதையாகும். நாவலில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வணிகரீதியாக தோல்வியுற்றது.[1]
கதை
திருச்சியில் வசிக்கும் பெண்ணான காயத்திரியை (ஸ்ரீதேவி) சென்னையில் வசிக்கும் பணக்காரரான ராஜரத்தினம் (ரஜினிகாந்த்) திருமணம் செய்து கொள்கிறார். ராஜரத்தினத்தின் சகோதரியாக வரும் சரசு திருமணத்தை நடத்தி வைக்கிறார். திருமணம் முடிந்தபிறகு காயத்திரி ராஜரத்தினத்தின் வீட்டிற்கு வந்து சேர்கிறார். ராஜரத்தினத்தின் குடும்பத்தில் இருண்ட ரகசியங்கள் இருப்பதை உணர்கிறாள்.
ராஜரத்தினம் உண்மையில் ஒரு நிலப்படத் தயாரிப்பாளர். ஒரு கட்டத்தில் இராஜரத்தினம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, ஏமாற்றி நீலப்படம் எடுத்து கறுப்பு சந்தையில் விற்பவர் என்றபது தெரியவருகிறது. மேலும் இராஜரத்தினத்திற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆனதும், அவருக்கு பைத்தியம் பிடித்துள்ளதும் தெரிகிறது. எழுத்தாளர் செல்லப்பாவின் நண்பரான கணேஷ், காயத்திரியை ராஜரத்தினத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முயற்சிக்கிறார்.
நடிகர்கள்
- கணேசாக ஜெய்சங்கர் [2]
- இராஜரத்தினமாக இரசினிகாந்து [3]
- காயத்திரியாக ஸ்ரீதேவி [3]
- சரசுவாக ராஜசுலோசனா[3]
- காயத்திரியின் தாயாக எம். என். ராஜம்[4]
- இந்திராவாக இராஜீ
- இல்லிதாவாக இராஜேஸ்வரி
- சாமா ஐயராக எஸ். ஏ. அசோகன் [4]
- செல்லப்பாவாக வெண்ணிற ஆடை மூர்த்தி[2]
- காயத்திரியின் தந்தையாக டெல்லி குமார்
- டைகர் பிரபாகர்[5]
தயாரிப்பு
இப்படம் இதே பெயரிலான சுஜாதாவின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.[6] இப்படம் அவசரநிலை காலத்தில் உருவானது.[2] திரைக்கதையை பஞ்சு அருணாசலம் எழுதினார்.[4]
இசை
பஞ்சு அருணாசலம் பாடல் வரிகள் எழுத இளையராஜா இசையமைத்தார்.[7][8] சுஜாதா மோகன் இந்தப் படத்தின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[9] "காலைப் பனியில் ஆடும் மலர்கள்" பாடல் மேசகல்யாணி ராகத்திலும்,[10] "வாழ்வே மாயமா வெறும் கதையா" பாடல் தர்மவதியிலும் அமைக்கப்பட்டது.[11][12]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "காலைப் பனியில் ஆடும் மலர்கள்" | சுஜாதா மோகன் | 4:00 | |||||||
2. | "வாழ்வே மாயமா வெறும் கதையா" | பி. எஸ். சசிரேகா | 3:57 | |||||||
3. | "ஆட்டம் கொண்டாட்டம்" | பி. சுசீலா | 4:06 | |||||||
4. | "உன்னை தான் அழைக்கிறேன்" | ஏ. எல். ராகவன், எஸ். ஜானகி | 3:40 | |||||||
மொத்த நீளம்: |
15:43 |
மேற்கோள்கள்
- ↑ "நாவல்கள், திரைப்படங்களாக உருமாறும்போது...". தினமணி. 6 ஏப்ரல் 2015. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2015/apr/06/நாவல்கள்-திரைப்படங்களாக-உர-1094199.html.
- ↑ 2.0 2.1 2.2 Ramachandran 2014, ப. 71.
- ↑ 3.0 3.1 3.2 Ramachandran 2014, ப. 70.
- ↑ 4.0 4.1 4.2 ராம்ஜி, வி. (7 October 2020). "சுஜாதாவின் நாவல்; வில்லன் ரஜினி; பரிதாப ஸ்ரீதேவி; காப்பாற்றும் ஜெய்சங்கர்; பஞ்சு அருணாசலத்தின் 'காயத்ரி' - உயிரை உருக்கும் 'வாழ்வே மாயமா' பாடல்" (in ta). இந்து தமிழ் (நாளிதழ்) இம் மூலத்தில் இருந்து 22 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201122230121/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/588058-43-years-of-gayathri.html.
- ↑ "Gayatri (1977)" இம் மூலத்தில் இருந்து 27 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230727184725/https://www.avclub.com/film/reviews/gayatri-1977.
- ↑ "Rajni, the villain". 21 May 2007 இம் மூலத்தில் இருந்து 4 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210604044459/https://www.rediff.com/movies/2007/may/21slid5.htm.
- ↑ "Kavithaikuyil-Gayathri-Kaatrinile Varum Geetham Tamil Film Audio Cassette" இம் மூலத்தில் இருந்து 4 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210604050258/https://mossymart.com/product/kavithaikuyil-gayathri-kaatrinile-varum-geetham-tamil-film-audio-cassette/.
- ↑ "Gayathri (Original Motion Picture Soundtrack) – EP". 31 December 1977 இம் மூலத்தில் இருந்து 4 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230804130618/https://music.apple.com/us/album/gayathri-original-motion-picture-soundtrack-ep/1394046349.
- ↑ "Ten Interesting Facts About Sujatha Mohan, Judge Of Sa Re Ga Ma Pa Keralam". 8 November 2019 இம் மூலத்தில் இருந்து 1 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210501131214/https://www.zee5.com/zee5news/ten-interesting-details-of-sujatha-mohan-judge-of-sa-re-ga-ma-pa-keralam.
- ↑ Sundararaman 2007, ப. 135.
- ↑ Sundararaman 2007, ப. 167.
- ↑ ராமானுஜன், டாக்டர் ஆர். (21 September 2018). "ராகயாத்திரை 22: பொன்வானம் பன்னீர் தூவுது!" (in ta) இம் மூலத்தில் இருந்து 4 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230804132248/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/176486-22.html.
- 1977 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- தமிழ்ப் புதினங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள்