காதலாகி
காதலாகி | |
---|---|
இயக்கம் | கே. ஆர். விஸ்வா |
தயாரிப்பு | கே. ஆர். விஸ்வா |
கதை | கே. ஆர். விஸ்வா சி. பி. நாராயண் (வசனம்) |
இசை | ஏ. ஆர். ரெய்கானா(பாடல்) தமன் (பின்னணி இசை) |
நடிப்பு | கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன் சிருஷ்டி டங்கே பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | ரவி சங்கர் |
படத்தொகுப்பு | பி. மனோகரன் |
கலையகம் | கே. கிரியேஷன்ஸ் |
வெளியீடு | மே 28, 2010 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதலாகி (kadhalagi) 2010 ஆம் ஆண்டு கே. ஆர். விஸ்வா இயக்கத்தில், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், பிரகாஷ் ராஜ் மற்றும் சிருஷ்டி டங்கே நடிப்பில், பாடல்கள் ஏ. ஆர். ரெய்கானா மற்றும் பின்னணி தமன் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4][5]
கதைச்சுருக்கம்
தொடர்வண்டியில் பயணம் செய்யும் இளைஞர்களான நான்கு நண்பர்களிடம் அனந்தகிருஷ்ணன் (பிரகாஷ் ராஜ்) இக்காலத்து இளைஞர்கள் அக்கறையும் பொறுப்பும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக இருப்பதாகக் கூறுகிறார். அவருடைய கூற்றை பொய் என்று நிரூபிக்க நான்கு நண்பர்களும் முடிவெடுக்கின்றனர்.
நந்தினி வேலு நாச்சியார் (சிருஷ்டி டங்கே), ரேஸ்மி குமார் (அம்ரிதா சபிரியா), மகேஷ் முத்துசாமி (நதிம் கான்), முகமது அஸ்லாம் (ரோஷன் நவாஸ்) மற்றும் ஏஞ்சலினா கிறிஸ்டி (நட்சத்திரா) கட்புலத் தொடர்பாடல் பட்டப்படிப்பு படிக்கும் நண்பர்கள். மாயவித்தை நிபுணரான தியாகுவும் (கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன்) நந்தினியும் காதலர்கள். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதை அறியும் நந்தினியின் உறவினரான ராஜா ராஜசேகரன் (விஜய் கோபால்) நந்தினியை ஆணவக்கொலை செய்கிறான். ஆனால் அந்தக் கொலையை மறைத்து சட்டத்திடமிருந்து தப்பிக்கிறான் ராஜா. இதனால் மற்ற ஐவரும் சேர்ந்து நந்தினியின் கொலைக்கான நியாயம் வேண்டி போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் போராட்டத்தை காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டு ஒடுக்குகிறது. தொலைக்காட்சியில் இக்கொலை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர ஒரு நிகழ்ச்சியைத் துவக்குகின்றனர்.
ஆனால் இறந்துவிட்டதாக நினைத்த நந்தினி உயிரோடு வருகிறாள். ஏன் நந்தினி இறந்துபோனதாக நாடகம் நடத்தினார்கள். அதனால் அவர்கள் சாதித்தது என்ன? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன் - தியாகு
- சிருஷ்டி டங்கே - நந்தினி வேலு நாச்சியார்
- பிரகாஷ் ராஜ் - அனந்தகிருஷ்ணன்
- விஜய் கோபால் - ராஜா ராஜசேகரன்
- அம்ரிதா சபிரியா - ரேஸ்மி குமார்
- நதீம் கான் - மகேஷ் முத்துசாமி
- ரோஷன் நவாஸ் - முகமது அஸ்லாம்
- நட்சத்திரா - ஏஞ்சலினா கிறிஸ்டி
- காஷிஷ் - காஷிஷ் கபூர்
- சந்தேஷ் - சிவபிரபு
- ஜெயஸ்ரீ - மைதிலி
- பாயிஷா
- ஜார்ஜ் மரியான் - சங்கரன்
இசை
படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் ஏ. ஆர். ரெய்கானா. பின்னணி இசையமைத்தவர் தமன். பாடலாசிரியர் வைரமுத்து.[6][7][8][9]
பாடல் வரிசை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "மனதில் பூச்செடி" | தீபா மிரியம், பெல்லி ராஜ், பிக்னிக், சிரவண பார்கவி | 5:01 | |||||||
2. | "வாழ்வோமே வாழ்வோமே" | சுசித்ரா, கவி சுரேஷ் | 4:23 | |||||||
3. | "உடல் மொழி உலகின்" | சுசான்னே டிமெல்லோ | 4:19 | |||||||
4. | "காதலே காதலே" | சங்கர் மகாதேவன் | 4:37 | |||||||
5. | "கண்ணதாசன் கவிதைகளை" | ஹரிசரண் | 5:14 | |||||||
6. | "ரோஜா தோட்டத்தில்" | கார்த்திக், பென்னி தயாள், பிரசாந்தினி, ஏ. ஆர். ரெய்கானா | 4:45 | |||||||
மொத்த நீளம்: |
28:19 |
மேற்கோள்கள்
- ↑ "காதலாகி". https://spicyonion.com/movie/kadhalagi/.
- ↑ "காதலாகி". https://www.indiaglitz.com/-quot-kadhalagi-will-fill-the-gap-quot--tamil-news-56273.html.
- ↑ "காதலாகி" இம் மூலத்தில் இருந்து 2019-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190321175221/http://www.gomolo.com/kadhalagi-movie/40487.
- ↑ "விமர்சனம்". http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/kadhalagi.html.
- ↑ "விமர்சனம்" இம் மூலத்தில் இருந்து 2019-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190321175218/http://www.kollywoodtoday.net/reviews/review-kadhalagi/.
- ↑ "பாடல்கள்". https://www.raaga.com/tamil/album/Kaadhalaagi-songs-T0002453.
- ↑ "பாடல்கள்". http://www.mio.to/album/Kadhalagi+%282010%29.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "பாடல் வெளியீடு" இம் மூலத்தில் இருந்து 2018-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181113031036/http://www.sify.com/entertainment/movies/tamil/fullstory.php?id=14938495.
- ↑ "இசை விமர்சனம்" இம் மூலத்தில் இருந்து 2019-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190321180723/https://www.southdreamz.com/21271/kadhalagi-music-review/.