இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரித்தானிய இலங்கையின் சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911
1911 1916 →

இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு 21 இடங்கள்

பிரித்தானிய இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்கான தேர்தல் (election to the Legislative Council of Ceylon) 1911 ஆம் ஆண்டில் இடம்பெற்றது.

பின்னணி

இலங்கையின் சட்டவாக்கப் பேரவை 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரித்தானிய ஆளுநர் உட்பட 16 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இவர்களில் இலங்கை நிறைவேற்றுப் பேரவையின் ஐவர், நான்கு அரசாங்க அதிகாரிகள், மேலும் ஆறு பேர் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் (மூன்று ஐரோப்பியர், ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு பரங்கியர்) நியமிக்கப்பட்டனர்.

1889 இல் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டது (மூன்று ஐரோப்பியர், ஒரு கீழைத்தேய சிங்களவர், ஒரு கண்டியச் சிங்களவர், ஒரு தமிழர், ஒரு சோனகர், ஒரு பரங்கியர்)[1].

1910 ஆம் ஆண்டில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் 11 பேர் அதிகாரபூர்வ உறுப்பினர்களும் 10 அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களும் (இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பரங்கியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைக் கல்விமான், இரண்டு நியமனம் பெற்ற கீழைத்தேய சிங்களவர், இரண்டு நியமனம் பெற்ற தமிழர், ஒரு நியமனம் பெற்ற கண்டிச் சிங்களவர், ஒரு நியமனம் பெற்ற சோனகர்) ஆவர்[2] மூவாயிரத்துக்கும் குறைவான இலங்கையர்கள் நான்கு அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களுக்காக வாக்களிக்கத் தகுதி பெற்றனர்[2].

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள்

படித்த இலங்கையர் பிரதிநிதி

இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்[3].

நகர்ப்புற ஐரோப்பிய பிரதிநிதி
  • அலெக்சாண்டர் பெயர்லி
நாட்டுப்புற ஐரோப்பியர் பிரதிநிதி
  • எட்வர்ட் ரோஸ்றிங்
பரங்கியர் பிரதிநிதி
  • எக்டர் வில்லியன் வான் கயிலன்பர்க்

அதிகாரபூர்வமற்ற நியமனப் பிரதிநிதிகள்

ஆறு பேர் உத்தியோகப்பற்றற்ற முறையில் நியமிக்கப்பட்டனர்[3].

கரையோரச் சிங்களவர் பிரதிநிதிகள்
  • சி. எல். ஒபயசேகரா
  • அல்பிரட் யோசப் ரிச்சார்ட் டி சில்வா
கண்டிச் சிங்களவர் பிரதிநிதி
  • தியோடர் முணமலி
தமிழர் பிரதிநிதிகள்
முசுலிம் பிரதிநிதி
  • வப்பிச்சி மரைக்கார் அப்துல் ரகுமான்

சட்டசபைக் கூட்டம்

புதிய சட்டவாக்க சபை 1912 சனவரி 16 இல் ஆளுனர் மெக்கலம் என்பவர் தலைமையில் கூடி, புதிய உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்[3].

மேற்கோள்கள்

  1. Wijesinghe, Sam (25 டிசம்பர் 2005). "People and State Power". சண்டே ஒப்சேர்வர் இம் மூலத்தில் இருந்து 2011-06-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605111144/http://www.sundayobserver.lk/2005/12/25/fea104.html. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2010. 
  2. 2.0 2.1 கே. ரி. ராஜசிங்கம் (18 ஆகத்து 2001). "Chapter 2: Beginning of British Rule". SRI LANKA: THE UNTOLD STORY (ஏசியா டைம்ஸ்) இம் மூலத்தில் இருந்து 2009-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090217124233/http://www.atimes.com/ind-pak/CH18Df04.html. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2010. 
  3. 3.0 3.1 3.2 குலரத்தினம், க. சி., நோர்த் முதல் கோபல்லாவ வரை, 1966