ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
Jump to navigation
Jump to search
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே | |
---|---|
இயக்கம் | செந்தில்நாதன் |
தயாரிப்பு | தமிழ் பாத்திமா |
கதை | கே. சி. தங்கம்(உரையாடல்) |
திரைக்கதை | செந்தில்நாதன் |
இசை | பாலபாரதி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | இராஜராஜன் |
படத்தொகுப்பு | ஜி. ஜெயச்சந்திரன் |
கலையகம் | தமிழன்னை சினி கிரியேசன் |
வெளியீடு | மே 17, 1996 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே (Aavathum Pennale Azhivathum Pennale) என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான தமிழ் குற்றத் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் இயக்கிய இப்படத்தில் அருண் பாண்டியன், மன்சூர் அலி கான், ஜெயபாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். தமிழ் பாத்திமா தயாரித்த இப்படத்திற்கு, பால பாரதி இசை அமைத்தார். படமானது 17 மே 1996 இல் வெளியானது.[1][2]
நடிகர்கள்
- அருண் பாண்டியன் ஆண்டணியாக
- மன்சூர் அலி கான் பிரபாகரனாக
- ஜெயபாரதி (மலையாள நடிகர்) சந்திராவாக
- மா. நா. நம்பியார் தீனதயாளனாக
- மணிவண்ணன் சிவலிங்கமாக
- ராஜஸ்ரீ லட்சுமியாக
- சி. ஆர். விஜயகுமாரி பிரபாகரனின் தாயாக
- டி. என். எஸ். அசோக்குமார்
- ஜின்னா
- பாபி சந்திராவின் சகோதரராக
- விவேக் தனுசாக
- பாலு ஆனந்த் மனுஷாக
- விஜய் கிருஷ்ணராஜ் சார்லசாக
- பீலி சிவம் காவல் ஆய்வாளராக
- இரவிராஜ் காவல் ஆய்வாளராக
- பெரியார்தாசன் பிரபாகரனின் தந்தை அமாவாசையாக
- சிட்டி சி.பி.ஐ. அலுவலராக
- இடிச்சப்புளி செல்வராசு ஜோசியராக
- குள்ளமணி காவல் ஆய்வாளராக
- கோவை செந்தில் குப்புசாமியாக
- வைத்தி அழகுநம்பியாக
- நெல்லை சிவா சந்தணக்கருப்பனாக
- கவிதாசிறீ காவல் ஆய்வாளர் சத்தியவதியாக
- ஜே. இலலிதா இலட்சுமியாக
- பெருமாள் மருத்துவர் சர்லசின் மனைவியாக
- சிறீ பாரதி
- எல். ஐ. சி. நரசிம்மன் மருத்துவர் மாரியாக
- பயில்வான் ரங்கநாதன்
- சில்க் ஸ்மிதா சிறப்புத் தோற்றத்தில்
இசை
இத்திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் பாலபாரதி அமைத்தார். 1996 இல் வெளியிடப்பட்ட இந்த இசைப்பதிவில், பைரிசுதன் எழுதிய ஆறு பாடல்கள் உள்ளன.[3]
எண் | பாடல் | பாடகர் (கள்) | காலம் |
---|---|---|---|
1 | "சின்ன சிட்டி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:03 |
2 | "மவனே மகராசனே" | சித்ரா | 5:02 |
3 | "மவனே மகராசனே" | அனுராதா ஸ்ரீராம் | 5:14 |
4 | "நில்லு நில்லு" | சுவர்ணலதா | 5:04 |
5 | "உயிர் உயர் தீபமே" | மனோ | 5:01 |
6 | "உயர் உயிர் தீபமே" | பால பாரதி | 5:21 |
மேற்கோள்கள்
- ↑ "Filmography of aavathum pennala azhivathum pennala". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928053244/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=aavathum%20pennala%20azhivathum%20pennala.
- ↑ "Avathum Pennale Azhivathum Pennale (1996) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/avathum-pennale-azhivathum-pennale/.
- ↑ "MusicIndiaOnline — Aavathum Pennale Azhivathum Pennale(1996)". mio.to இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928173058/http://mio.to/album/29-tamil-movie-songs/232531-Aavathum_Pennale_Azhivathum_Pennale__1996_/.