ஆவண நூல்கள்
Jump to navigation
Jump to search
ஆவண நூல்கள் என்பது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களைக் குறிக்கும். ஆவணங்கள் சாசனங்கள் எனவும் வழங்கப்படுகின்றன. பண்டைய அரசர்களின் ஆவணங்கள் கல்வெட்டுகளாகவும், செப்பேடுகளாகவும் உள்ளன. ஓலையில் எழுதப்பட்ட ஆவணங்களும் உண்டு. இதற்கு எடுத்துக்காட்டு, சுந்தரரின் முன்னோர் பித்தனுக்கு அடிமை என எழுதிக் கொடுத்த ஓலை (பெரியபுராணம்) .
ஆவணங்களில் குறிப்பிடப்படும் நூல்களை ‘ஆவண நூல்கள்’ என்றும், அந்த நூல்களை எழுதிய புலவர்களை ‘ஆவணப் புலவர்கள்’ என்றும் குறிப்பிடப்படுகின்றனர். 13ஆம் நூற்றாண்டில் நாடாண்ட சோழ, பாண்டிய அரசர்கள் அளித்த ஆவணங்களில் இத்தகைய நூல்களும், புலவர்களும் காணப்படுகின்றனர்.
ஆவணங்கள் குறிப்பிடும் நூலும் புலவரும்
சோழர் போற்றிய புலவர்கள்
- பாரதம் – அருள்நிலை விசாகன்
- சிந்து – திருவாழி பரப்பினான் கூத்தன்
- குலோத்துங்கன் கோவை – வீராந்தகப் பல்லவரையரின் அவைகளப் புலவர்
பாண்டியர் போற்றிய புலவர்கள்
- போர்வஞ்சி - திருவரன்குளம் உடையான்
- காங்கேயன் பிள்ளைத்தமிழ் (கண்ணமங்கலம் காங்கேயன் மீது பாடப்பட்டது)
- காங்கேயன் பிள்ளைத்தமிழ் (நியமம் காங்கேயன் மீது பாடப்பட்டது)
- காரணை விழுப்பரையன் மடல் – காங்கேயன்
- கவிராயர் ஈசுவர சிவ உடையார் என்னும் புலவர்
- தாயின் நல்ல பெருமாள் என்னும் புலவர்
ஆவணப் பாடல்களால் பாடப்பெற்றோர்
- கோப்பெருஞ்சிங்கன்
- ஆரிய சேகரன்
- மகதைப் பெருமாள்
- சுந்தர பாண்டியன் 1216-1238 பாட்டு
- சுந்தர பாண்டியன் 1251-1271 பாட்டு
- விக்கிரம பாண்டியன் 1248-1258 பாடல்கள்
__DISAMBIG__
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
__DISAMBIG__
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005