அருள்நிலை விசாகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அருள்நிலை விசாகன் என்பவன் மகாபாரதக் கதையைத் தமிழில் செய்தவர்களில் ஒருவன். மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின் 32-ஆவது ஆண்டில் (கி.பி. 1210) வெட்டப்பட்ட கல்வெட்டு ஆவணம் அருள்நிலை விசாகன் மகாபாரதத்தைத் தமிழில் செய்தான் எனக் குறிப்பிடுகிறது. இவனது பெயரை ‘அறநிலை விசாகன்’ எனவும் படித்தறிவர், சதாசிவ பண்டாரத்தார்.[1] இந்த நூல் இன்று கிடைக்கப்பெறவில்லை. கல்வெட்டுத் தொடர் இவனை அரசுத் தலைவன் எனக் காட்டுகிறது.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. ‘மணவில் கோட்டத்துத் திருப்பழையனூர் திவால்லகாட்டுத் திருவரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளின நாயனாருக்குக் குன்றவத்தனக் கோட்டத்து இல்லத்தூர் நாட்டு அரும்பாக்கம் உடைய அருணிலை விசாகன் திரைலோக்கிய மல்லன் வத்ஸராசன் நந்தாவிளக்கு வைத்தார் என்றும், பாரதம் தன்னை அருந்தமிழ்ப்படுத்திச் சிவநெறி கண்டான் என்றும் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
"https://tamilar.wiki/index.php?title=அருள்நிலை_விசாகன்&oldid=18350" இருந்து மீள்விக்கப்பட்டது