ஆலி ஆட்டம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ஆலி ஆட்டம் என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும். ஆலி எனப்படும் பூத வடிவில் அமைந்த, உள்ளீடற்ற ஓர் உருவ பொம்மைக்குள் நாட்டுப்புறக் கலைஞர்கள் நுழைந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். இந்த ஆலிகள் மூங்கில், காகிதம் போன்றவற்றால் செய்யப்படுகின்றன. கலைஞர்கள் ஆலிகளுக்கு வண்ணம் தீட்டித், தலையில் மாட்டிக்கொண்டு ஆடுவர்.

பூத வடிவம் மட்டுமின்றி கரடி, புலி, மூதாட்டி போன்ற வேடங்களிலும் ஆலிகள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாட்டத்தில் ஆண்களே, பெண் வேடமணிந்து ஆடுவதும் உண்டு.[1] பூதம், பேய், பிசாசு போன்றவற்றின் மீது மனிதர்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்குவதற்காகவே ஆலி ஆட்டம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கோரமான உருவங்களாக மனிதர்கள் கற்பனை செய்து வைத்திருந்த முகங்களை உருவாக்கி, அதை அணிந்து கொண்டு கோயில் திருவிழாக்களில் ஆலி ஆட்டம் நிகழ்த்தப்படுகிறது. இது குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஆட்டமாகும்.

ஆலி ஆட்டம், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. இது கோவில்களில் திருவிழாக்களின் போது நடத்தப்படுவதோடு, பிற நிகழ்ச்சிகளில் சமூகம் சார்ந்ததாகவும் நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. Retrieved 2012-06-26.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆலி_ஆட்டம்&oldid=268265" இலிருந்து மீள்விக்கப்பட்டது