அம்பிகை அந்தாதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அம்பிகை அந்தாதி என்னும் நூல் உமையம்மைமீது பாடப்பட்ட அந்தாதி நூல். இதனைப் பாடியவன் ‘அம்பர் காவலன் சேந்தன்’. சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூல் இவனைப் போற்றித் திவாகர முனிவர் என்பவரால் பாடப்பட்டது. இந்த நிகண்டு நூலில் வரும் ஒருபாடல் இந்தச் சேந்தன் அம்பிகைமீது அந்தாதி பாடியதைக் குறிப்பிடுகிறது.

அண்ணல் செம்பாதிக் காணி யாட்டியைப்
பெண்ணணங்கை மூவரும் பெற்ற அம்மையைச்
செந்தமிழ் மாலை அந்தாதி புனைந்த
நாவல் அம்பர்க் காவலன் சேந்தன்
இயல்வுற்ற திவாகரம் – சேந்தன் திவாகரம், ஒன்பதாவது செயல்பற்றிய பெயர்த்தொகுதி, இறுதியில் உள்ள பாடல்.
  • இந்த நூலின் காலம் 9ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
  • சேந்தன் திவாகரம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1958

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=அம்பிகை_அந்தாதி&oldid=16751" இருந்து மீள்விக்கப்பட்டது