அனுரா பண்டாரநாயக்கா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அனுரா பண்டாரநாயக்கா |
---|---|
பிறந்ததிகதி | 15 பெப்பிரவரி 1949 |
இறப்பு | 16 மார்ச்சு 2008 (அகவை 59) கொழும்பு |
கல்வி நிலையம் | இலண்டன் பல்கலைக்கழகம் |
அனுரா பண்டாரநாயக்கா (பெப்ரவரி 15, 1949 – மார்ச் 16, 2008) இலங்கையின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வாதியுமாவார்.
தொடக்க வாழ்க்கை
முன்னாள் இலங்கை பிரதமர்களான சாலமன் பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாக 1949 பெப்ரவரி 15 ஆம் நாள் கொழும்பில் பிறந்தார். இவருக்கு சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க, சுனேத்திரா பண்டாரநாயக்கா என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உண்டு. கொழும்பு றோயல் கல்லூரி பள்ளிக் கல்வியைப் பயின்றார். வரலாற்றியலில் உயர் கல்விக்காக இலண்டன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். எனினும் கல்வி நடவடிகைகளை முடியுமுன்னரே இலங்கைத் திரும்பினார்.
அரசியல் வாழ்க்கை
1970 முதல் 1977 வரை அப்போதைய பிரதமரான சிறீமாவோ பண்டாரநாயக்கவின் வெளிவிவகார மற்றும் திட்டமிடல் துறை ஆலோசகராக பணியாற்றினார். 1977 ஆம் ஆண்டு முதற் தடவையாக மூன்று பராளுமன்ற பதிவிகளைக் கொண்ட நுவரெலியா-மசுகெலியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு அதன் இரண்டாவது அங்கத்தவராக பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவர் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கா ஆகியோர் ஏனைய இரண்டு பதவிகளை கைப்பற்றியிருந்தனர். 1983 நவம்பர் 8 ஆம் நாள் அனுர பண்டாரநாயக்கா இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தொம்பே தேர்தல் தொகுதியில் அனுர போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளையடுத்து 1993 அக்டோபர் 11 ஆம் நாள் அனுர பண்டாரநாயக்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி அதே மாதம் 29 ஆம் நாள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இவருக்கு உயர்கல்வி அமைச்சு வழங்கப்பட்டது. 1994 முதல் 2000 ஆண்டு வரை எதிர்கட்சி உறுப்பினராக செய்றபட்டார். 2000 அக்டோபர் 18 ஆம் நாள் இலங்கையின் 11வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2001 அக்டோபர் 10 ஆம் நாள் வரை வரை அப்பதவியிலிருந்தார்.
பின்னர் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டார். 2001 டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியைச் சந்தித்த போதும் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 ஆண்டு பொதுத்தேர்தலுக்காக இலங்கை சுதந்திரக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையும் ஒன்று சேர்த்து கூட்டு முன்னணியொன்றினை நிறுவுவதில் அனுர பண்டாரநாயக்கா பாரிய பங்காற்றினார். அத்தேர்தலில் வெற்றி பெற்ற அனுர உல்லாசப்பிரயாண, கைத்தொழில், முதலீட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு லக்சுமன் கதிர்காமர் கொலையைத் தொடர்ந்து இலங்கை வெளிநாட்டமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இதன் போது உல்லசப்பிரயாண அமைச்சும் அவருக்கு வழங்கப்பட்டு கைத்தொழில், முதலீட்டு அமைச்சுகள் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது.
2005 ஆண்டின் அதிபர் தேர்தலுக்காக இவருக்கு பதிலாக மகிந்த ராஜபக்ச கட்சியால் தெரிவுச் செய்யப்பட்டர். மகிந்தவின் வெற்றிக்குப் பின்னர் பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிபார்க்கப்பட்டாலும் உல்லசப்பிரயாண அமைச்சு மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. 2007 ஜனவரி அமைச்சரவை மாற்றத்தின்போது உல்லசப்பிரயாண அமைச்சு பறிக்கப்பட்டு தேசிய மரபுரிமை அமைச்சு வழங்கப்பட்டது. 2007 பெப்ரவரி 9 ஆம் நாள் மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராச்சி ஆகியோருடன் சேர்த்து பதவி விலக்கப்பட்டார். இரண்டு வாரங்களுக்குள் மகிநத ராஜபக்சவுடன் இணக்கப்பட்ட்டுக்கு வந்து தேசிய மரபுரிமை அமைச்சராக பதவியேற்றார். 2007 டிசம்பர் 14 ஆம் நாள் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டதையடுத்து அமைச்சுப் பதவியை இழந்தார். தனது 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 5 ஆண்டுகள் மட்டுமே அரசில் அங்கம் வகித்தார்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "FM chosen from Sri Lankan dynasty". BBC News. 22 August 2005. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4173570.stm.
- ↑ "Sri Lanka ruling party sparks fly". BBC News. 13 September 2005. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4241464.stm.
- ↑ "Anura: Boycott Burmese products". BBC News. 30 September, 2007. http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/09/070930_burma_bahila.shtml.
வெளியிணைப்புகள்
- அனுர பண்டாரநயக்கா பற்றி[தொடர்பிழந்த இணைப்பு] அதிரடி இணையத்தளம்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கை பௌத்தர்கள்
- பண்டாரநாயக்கா குடும்பம்
- இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்கள்
- 2008 இறப்புகள்
- 1949 பிறப்புகள்
- இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- கொழும்பு மாவட்ட நபர்கள்
- கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்
- இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்கள்
- இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்