அக்ககுமாரன்
Jump to navigation
Jump to search
அக்ககுமாரன்(அட்சயகுமாரன்) இராவணனின் மகன், அனுமன் சீதையைத் தேடி இலங்கைக்கு சென்றான். அங்கு சீதையைக் கண்டு விட்டுத் தன் வருகையை இராவணனுக்கு அறிய வைக்க எண்ணினான். அப்பொழுது அசோக வனத்தில் இருந்த மரங்கள், பழங்கள் போன்றவற்றை அழித்தான். அதனாற் சினமுற்ற இராவணன் அனுமனைச் சிறைப் பிடிக்கச் சொன்னான். காவல் வீரர்களாற் சிறைப் பிடிக்க முடியவில்லை. அட்சய குமாரன் அனுமனைப் பிடித்துப் போக வந்தான். அப்பொழுது அனுமன் அட்சயகுமாரனை அடித்துக் கொன்றான்.[1]