விருத்தி (யோகம்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>Alangar Manickam பயனரால் செய்யப்பட்ட 21:10, 22 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இந்திய சோதிடத்தில் விருத்தி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினோராவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 133° 20' தொடக்கம் 146° 40' வரை "விருத்தி" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "விருத்தி" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "விருத்தி" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.

சமசுக்கிருத மொழியில் வ்ரித்தி (Vriddhi) என்பது வளர்ச்சி அடைதல், பெருகுதல் என்னும் பொருள் கொண்டது. மங்கலமானவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் புதன். ஆட்சித் தேவதை சூரியன்.[1]

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றை பார்க்கBSO

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=விருத்தி_(யோகம்)&oldid=498951" இலிருந்து மீள்விக்கப்பட்டது