பராசரர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பராசரர்
படிமம்:पराशर ऋषि.jpg
பராசரரது சிலை
சமயம்இந்து சமயம்

பராசரர் வியாசரின்தந்தை. சக்தி மகரிஷியின் மகன்.[1] இந்து சமயத்தின் ஆதாரநூல்களில் ஒன்றான பராசர-ஸ்ம்ருதி என்ற நூல் இவருடைய பெயரைத் தாங்குகிறது. விஷ்ணு புராணத்தின் மூல ஆசிரியரும் இவரே. வியாசர் இவர் எழுதிய விஷ்ணு புராணத்தை சீர்படுத்தி அவர் இயற்றிய மற்ற புராணங்களுடன் சேர்த்துக்கொண்டார்.[2]

பன்னிரண்டாவது நூற்றாண்டில் ராமானுஜர் தன்னுடைய சீடர்களில் ஒருவருக்கு பராசரர் என்று பெயரிட்டார். அவர் பராசர பட்டர் என்று பிரசித்தி பெற்றார். அவர் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு ஒரு விரிவான பாஷ்யம் (உரை) இயற்றினார். 'பராசர-பட்ட பாஷ்யம்' என்றே புகழ் பெற்ற அவ்வுரை விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இரண்டு சிறந்த பாஷ்யங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பராசரர்&oldid=426681" இலிருந்து மீள்விக்கப்பட்டது