லோகேஷ் கனகராஜ்

தமிழர்விக்கியிலிருந்து
~2025-35104-03 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 12:11, 20 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (திரைப்படத் தொழில்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
லோகேஷ் கனகராஜ்
‘ஜீ சினி விருதுகள்’ நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ்
பிறப்புமார்ச்சு 14, 1986 (1986-03-14) (அகவை 40) [1][2]
கிணத்துக்கடவு, கோயம்புத்தூர், தமிழ்நாடு [3]
படித்த கல்வி நிறுவனங்கள்பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி [4]
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2015-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஐஸ்வர்யா (தி. 2012)
பிள்ளைகள்1

லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டிலிருந்து மாநகரம் (2017),[5] கைதி (2019),[6][7][8][9][10][11] போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2020ஆம் ஆண்டு விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர்[12] திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். கமலுடன் விக்ரம் படத்தையும், விஜயுடன் லியோ படத்தையும் இயக்கியுள்ளார்.

இளமை

லோகேஷ் கனகராஜ் இந்தியாவில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை வணிக நிர்வாகவியல் படிப்பைத் தொடர்வதற்கு முன்பு, பேஷன் தொழில்நுட்பத்தில் முதன்மைப் பட்டம் பெற்றார். இவர் தனது பள்ளிப்படிப்பை விவேக் வித்யாலயா மெட்ரிக் உயர்நிலை பள்ளியில் படித்துள்ளார். இவர் திரைப்படத் துறையில் பணியாற்றுவதற்கு முன்னர் வங்கி ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்துள்ளார். திரைப்படத் தயாரிப்பின் மீதான தனது ஆர்வத்தைத் தொடர்ந்து ஒரு பெறுநிறுவன குறும்படப் போட்டியில் பங்கேற்றார். போட்டியின் நடுவராக கார்த்திக் சுப்பராஜ் இருந்தார். இவரது குறும்படத்தால் ஈர்க்கப்பட்ட சுப்பராஜ், லோகேசை திரைப்படத் தயாரிப்பதில் இயக்குநராகத் தொடர ஊக்குவித்தார்.

திரைப்படத் தொழில்

2012ஆம் ஆண்டு வெளியான அச்சம் தவிர் என்ற குறும்படத்தின் மூலம் லோகேஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த குறும்படத்திற்கு கிளப்பேஸ் குறும்பட விழாவில் சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் ஆகிய விருதுகள் கிடைத்தன. 2016ஆம் ஆண்டில், கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த "அவியல்" என்ற தொகுப்புத் திரைப்படத்தில் இவரது குறும்படமான "கலாம்" சேர்க்கப்பட்டது. இவர் 2017ஆம் ஆண்டில் தனது முதல் திரைப்படமான மாநகரத்தை இயக்கினார். இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த அதிரடித் திரைப்படமான கைதியில் கார்த்தி முன்னணி வேடத்தில் நடிக்க இயக்கினார். தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் போன்ற பிளாக் பஸ்டர் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார்.அடுத்தவதாக உலகநாயகனை வைத்து விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் குறிப்புகள்
2016 அவியல் ஆம் இல்லை கதை Anthology film; பிரிவு: கலாம்
2017 மாநகரம் ஆம் இல்லை கதை
2018 வெள்ளை ராஜா இல்லை இல்லை கதை தொலைக்காட்சித் தொடர்
2019 கைதி ஆம் ஆம்
2021 மாஸ்டர் ஆம் இல்லை கதை Cameo
2022 விக்ரம் ஆம் இல்லை ஆம் 2nd installment in the LCU
2023 மைக்கேல் இல்லை தயாரிப்பாளர் இல்லை Telugu film; Presenter for the Tamil dubbed version[13]
லியோ ஆம் இல்லை கதை 3rd installment in the LCU
Fight Club இல்லை Presenter இல்லை
2025 கூலி ஆம் இல்லை கதை co-written with Chandhru Anbazhagan
அறிவிக்கப்படும் Benz dagger இல்லை ஆம் கதை 4th installment in the LCU, also presenter
அறிவிக்கப்படும் Mr. Bhaarath dagger இல்லை ஆம் இல்லை Also presenter[14]

மேற்கோள்கள்

  1. "Here's a list of Tamil cinema's best directors under 45". October 27, 2019.
  2. "S R Prabhu". www.facebook.com.
  3. "Lokesh Kanagaraj Interview: Kaithi Is About A Father's Love And That Rare Bond Between Strangers". October 22, 2019.
  4. "A celebration of cinema and filmmaking - Times of India". The Times of India.
  5. "Maanagaram- Opens big on March 10". Sify.com. Archived from the original on 2017-03-07. Retrieved 2020-03-05.
  6. "Karthi to Team Up With Managaram Director Lockesh Kanagaraj". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. November 28, 2018. https://www.cinemaexpress.com/stories/news/2018/nov/28/karthi-to-team-up-with-maanagaram-director-lokesh-kanagaraj-8989.html. 
  7. "Karthi teams up with Maanagaram director Lokesh Kanagaraj". இந்தியா டுடே. December 12, 2018. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/karthi-teams-up-with-maanagaram-director-lokesh-kanagaraj-1408029-2018-12-12. 
  8. "Karthick Naren to Lokesh Kanagaraj: Promising young filmmakers of Tamil cinema". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/karthick-naren-to-lokesh-kanagaraj-promising-young-filmmakers-of-tamil-cinema/photostory/63534891.cms. 
  9. "Title of Karthi's Next With Managaram Director Lokesh Kanagaraj Is Here". In.com. March 3, 2019 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 2, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191102115644/https://www.in.com/entertainment/regional/title-of-karthis-next-with-managaram-director-lokesh-kanagaraj-is-here-330591.htm. 
  10. Kumar, Karthik (March 9, 2019). "Karthi looks intense in bloodied first look poster of Kaithi. See pic". ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/regional-movies/karthi-looks-intense-in-bloodied-first-look-poster-of-kaithi-see-pic/story-mN9S7SLGxd6Rotcbf3PRBN.html. 
  11. S, Srivatsan (October 19, 2019). "Lokesh Kanagaraj on 'Kaithi' and 'Thalapathy 64'" – via www.thehindu.com.
  12. "Team Thalapathy 64 arrives in Delhi; second schedule begins". இந்தியன் எக்சுபிரசு. November 2019.
  13. Dundoo, Sangeetha Devi (23 January 2023). "Interview: Sundeep Kishan says the gangster drama movie 'Michael' has changed him as an actor and a person". தி இந்து இம் மூலத்தில் இருந்து 28 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230128045405/https://www.thehindu.com/entertainment/movies/actor-sundeep-kishan-on-his-new-movie-michael-which-will-release-in-multiple-languages/article66416524.ece. 
  14. M, Narayani (2024-12-18). "Lokesh Kanagaraj to produce Mr Bhaarath". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-12-18.
"https://tamilar.wiki/w/index.php?title=லோகேஷ்_கனகராஜ்&oldid=489300" இலிருந்து மீள்விக்கப்பட்டது