யுகம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Alangar Manickam பயனரால் செய்யப்பட்ட 16:23, 17 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
Jump to navigation Jump to search

புராணங்களின் படி யுகங்கள் நான்கு. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். இந்த நான்கு யுகங்கள் சேர்த்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு யுகத்திலும் வாழ்பவர்களின் தோற்றமும்,குண நலன்களும் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

  • கிருத யுகம் - அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரிாக 9 அடி உயரமும், 1 லட்சம் ஆண்டுகள் வாழலாம்.
  • திரேதா யுகம் - நான்கில், மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 8 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10000 ஆண்டுகள் வாழலாம். இராமர் திரேதா யுகத்தில் பிறந்தார் எனப்படுகிறது.
  • துவாபர யுகம் - சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அடி உயரம் உள்ளவர்களாகவும், 1000 ஆண்டுகள் வாழலாம். கிருட்டிணர் மற்றும் பலராமர் ஆகியோர் துவாபர யுகத்தில் பிறந்தவர்கள் எனப்படுகிறது.
  • கலியுகம் - நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 120 ஆண்டுகள் வாழலாம்.

இந்த யுகத்தில் மக்கள் அவரவர்தன் சுயநலத்திற்காக அதர்மவழியில் சென்று பாவங்களை செய்வதால் பகைகுணம் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவர். இதன்காரணமாக திருமால் கல்கி அவதாரம் எடுத்து மனிதர்களை கொன்றுகுவித்து மீண்டும் இந்த உலகில் சத்தியத்தினை நிலைநாட்டும் யுகமென்பதால் இது சத்தியயுகம் என்று கூறப்படுகின்றது.' ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.

பகுப்பு முறை
கால பிரிவு அளவு முறை
15 நுண் வினாடிகள் 1 காட்டை (3.2 வினாடிகள்)
30 காட்டை 1 கலை (96 வினாடிகள்)
30 கலை 1 முகூா்த்தம் (48 நிமிடங்கள்)
30 முகூா்த்தம் 1 அகோரத்திரம் ( நாள் )
15 அகோரத்திரம் 1 பட்சம்
2 பட்சம் 1 மாதம்
6 மாதம் 1 அயனம்
2 அயனம் 1 ஆண்டு

இவ்வாறாக காலத்தை நுண்பிரிவாகவும்,

பெரும் பிரிவு
  1. கிருத யுகம் - 17,28,000 ஆண்டுகள்
  2. திரேதா யுகம் - 12,96,000 ஆண்டுகள்
  3. துவாபர யுகம் - 8,64,000 ஆண்டுகள்
  4. கலியுகம் - 4,32,000 ஆண்டுகள் [ கலியுகம் 3102 BCE இல் தொடங்கியதாக நம்பப்படுகிறது ]

இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம். 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்தரம். 14 மன்வந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.

கல்பங்கள்
  1. வாமதேவ கல்பம்
  2. சுவேத வராக கல்பம்
  3. நீல லோகித கல்பம்
  4. ரந்தர கல்பம்
  5. ரெளரவ கல்பம்
  6. தேவ கல்பம்
  7. விரக கிருட்டிண கல்பம்
  8. கந்தற்ப கல்பம்
  9. சத்திய கல்பம்
  10. ஈசான கல்பம்
  11. தமம் கல்பம்
  12. சாரசுவத கல்பம்
  13. உதான கல்பம்
  14. காருட கல்பம்
  15. கெளரம கல்பம்
  16. நரசிம்ம கல்பம்
  17. சமான கல்பம்
  18. ஆக்நேய கல்பம்
  19. சோம கல்பம்
  20. மானவ கல்பம்
  21. தட்புருச கல்பம்
  22. வைகுண்ட கல்பம்
  23. லெச்சுமி கல்பம்
  24. சாவித்ரி கல்பம்
  25. கோர கல்பம்
  26. வராக கல்பம்
  27. வைராச கல்பம்
  28. கௌரி கல்பம்
  29. மகோத்வர கல்பம்
  30. பிதிா் கல்பம்

தற்போது நடந்து கொண்டிருப்பது சுவேத வராக கல்பம் ஆகும்.

மேற்கோள்கள்

  • தமிழ்மொழி அகராதி - நா. கதிரவேற்பிள்ளை,சாரதா பதிப்பகம் - மாா்ச் 2003 - பக்கம்.1225
  • அபிதான சிந்தாமணி - ஆ. சிங்காரவேலு முதலியாா் - ஆசியன் எஜீகேஷனல் சா்வீசஸ் - 2005 - பக்கம்.1359,1360
  • சோதிட கிரக சிந்தாமணி - இராமலிங்க குருக்கள் (திருத்திய பதிப்பு) - பி.இரத்தின நாயகா் அண்ட் சன்ஸ் - 2009 - பக்கம்.23
"https://tamilar.wiki/w/index.php?title=யுகம்&oldid=480215" இலிருந்து மீள்விக்கப்பட்டது