மார்கழி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Alangar Manickam பயனரால் செய்யப்பட்ட 20:46, 20 பெப்பிரவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (மார்கழியின் சிறப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மார்கழி மாதத்தில் சூரியனின் நிலை.

சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனு இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

கால நிலை

குளிர் காலத்தின் துவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு திசம்பர், சனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலங்களாகும். குளிர்காலத்தின் துவக்கம் திசம்பர் 21 - 22 தேதிகளில் துவங்குகிறது.

குளிர்காலத்தின்போது துருவப்பகுதிகள் மிகக் குளிர்ந்து இருக்கும். அங்கு சில மாதங்கள் சூரியனைத் தொடர்ந்து காண முடியாது. அப்போது வறண்ட குளிர்காற்று அந்தப் பகுதியிலிருந்து தெற்குப்பகுதி நோக்கி வீசத்துவங்கும். ஆகையால் தென்பகுதிகளின் வானிலை வெப்பநிலை மற்றும் பகற்பொழுதின் அளவும் மாறுபடத் துவங்குகின்றன. பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்பமண்டல பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலையில் அதிக மாறுதல் ஏற்படுவதில்லை என்றாலும், மழை பொழிவின் காரணமாக சில பகுதிகளில் ஈரமிக்கதாகவும் மற்றபகுதிகளில் வறண்டும் காணப்படும்.[1]

மார்கழியின் சிறப்பு

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விட்டுணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள். வைணவ ஆலயங்களில் "வைகுண்ட ஏகாதசி" திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். சைவத் தலங்களில் சிவபெருமானின் நடராஜர் கோலத்திற்கு ஆருத்ரா தரிசனம் எனும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கலை மற்றும் கலாச்சார ரீதியாக மார்கழி மாதம் மிக முக்கியமானது. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் இம்மாதத்தில் புகழ்பெற்ற "மார்கழி இசை மற்றும் நடனத் திருவிழா" நடைபெறுகிறது. உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியக் கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர். மேலும், வீடுகளின் வாசல்களில் பெண்கள் வண்ணமயமான கோலமிட்டு, அதன் நடுவில் பரங்கிப் பூவை வைக்கும் மரபு இன்றும் கிராமங்களில் பின்பற்றப்படுகிறது. அதிகாலைக் குளிரில் பஜனைப் பாடல்கள் பாடி வீதிகளில் உலா வரும் "பஜனை" முறையும் இம்மாதத்தின் அடையாளமாகும். மார்கழி மாதத்தின் இறுதியில் தட்சிணாயன காலம் முடிந்து, தை மாதத்தில் உத்தராயண காலம் தொடங்கும் நிகழ்வு இயற்கை மாற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

பகவத் கீதையில் கண்ணன் "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளதால், இது மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது.

தமிழ் மாதங்கள்

வரிசை எண் தமிழ் சூரிய மாதம் ஆங்கில தேதிகள் தமிழ் மாதம் (ஆங்கிலம்) சந்திர மாதம் (சமஸ்கிருதம்) சூரிய மாதம் (இராசி) இராசி அடையாளம் முக்கிய நட்சத்திரம் சூரிய அடிப்படையிலான திருவிழாக்கள் சந்திர அடிப்படையிலான திருவிழாக்கள்
1 சித்திரை ஏப் 14 –
மே 14
Chithirai சைத்ர மேழம் (மேஷம்) வருடை (ஒரு வகை ஆடு) சித்திரை நட்சத்திரம் தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைத் திருவிழா இராம நவமி, சித்திரா பௌர்ணமி
2 வைகாசி மே 15 – ஜூன் 14 Vaikasi வைசாக விடை (ரிஷபம்) காளை அல்லது ஆண் மாடு விசாகம் நட்சத்திரம் வைகாசி விசாகம் நரசிம்ம ஜெயந்தி
3 ஆனி ஜூன் 15 – ஜூலை 16 Aani ஜ்யேஷ்ட ஆடவை (மிதுனம்) இரட்டைகள் அனுசம் ஆனி திருமஞ்சனம் குரு பூர்ணிமா
4 ஆடி ஜூலை 17–
ஆக 16
Aadi ஆஷாட கடகம் நண்டு பூராடம் / உத்திராடம் ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, வரலட்சுமி நோன்பு
5 ஆவணி ஆக 17 – செப் 16 Avani ஷ்ராவண சிங்கம் / மடங்கல் (சிம்மம்) சிங்கம் திருவோணம் ஆவணி அவிட்டம் கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி
6 புரட்டாசி செப் 17 – அக் 17 Purattasi பத்ரபாத கன்னி கன்னிப்பெண் பூரட்டாதி / உத்திரட்டாதி புரட்டாசி சனிக்கிழமை விரதம் நவராத்திரி நோன்பு, விஜயதசமி
7 ஐப்பசி அக் 18 – நவ 16 Aippasi அஸ்வின துலை (துலாம்) இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் அச்சுவினி அன்னாபிசேகம் தீபாவளி, கந்த சஷ்டி
8 கார்த்திகை நவ 17 –
டிச 15
Karthikai கார்திக நளி (விருச்சிகம்) தேள் கிருத்திகை கார்த்திகை விளக்கீடு கார்த்திகை பூர்ணிமா
9 மார்கழி டிச 16 – ஜன 13 Margazhi மார்கஷீர்ஷ தனுசு வில் மற்றும் அம்பு சேர்ந்திருக்கும் ஒரு சிலை மிருகசீரிடம் வைகுண்ட ஏகாதசி திருவாதிரை நோன்பு
10 தை ஜன 14 – பிப் 12 Thai பௌஷ சுறவம் (மகரம்) ஆடு பூசம் தைப்பொங்கல் ரத சப்தமி
11 மாசி பிப் 13 –
மா 13
Masi மக குடம் (கும்பம்) ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீர் மகம் மாசி மகம் மகா சிவராத்திரி
12 பங்குனி மா 14 –
ஏப் 13
Panguni பல்குண மீனம் இரு மீன்கள் உத்தரம் பங்குனி உத்திரம் ஹோலிகா தகனம்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?

வெளியிணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://tamilar.wiki/w/index.php?title=மார்கழி&oldid=466044" இலிருந்து மீள்விக்கப்பட்டது