பங்குனி

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:01, 29 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புகள்: clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தமிழ் மாதங்களும் சூரியனின் நிலையும்

பங்குனி தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் கடைசி மாதமாகும். சித்திரை தொடக்கம் பங்குனி வரையான தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது சூரியனைப் பூமி சுற்றுவதனால் ஏற்படும் பூமிக்குச் சார்பான சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. சூரியன் இராசிச் சக்கரத்தில் மீன இராசிக்குச் செல்வது பங்குனி மாதப் பிறப்பைக் குறிக்கிறது. இந்த மாதம் முழுதும் சூரியன் மீன இராசியிலேயே சஞ்சரிக்கும். இந்த மாதம் 30 நாட்களைக் கொண்டது. ஆங்கில காலக்கணிப்பின் படி மார்ச்சு மாதம் 15 ஆம் நாளிலிருந்து ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் வரையான காலப்பகுதி தமிழ்ப் பங்குனி மாதத்துடன் பொருந்துகிறது.

வெளியிணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://tamilar.wiki/w/index.php?title=பங்குனி&oldid=421786" இலிருந்து மீள்விக்கப்பட்டது