நரேலா
நரேலா | |
|---|---|
தில்லியின் நகர்புறம் | |
இந்தியாவின் தில்லி மாநிலத்தின் வடக்கு தில்லி மாவட்டத்தில் நரேலா நகர்புறத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 28°51′N 77°06′E / 28.85°N 77.1°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தில்லி |
| மாவட்டம் | வடக்கு தில்லி மாவட்டம் |
| அரசு | |
| • வகை | மாவட்ட ஆட்சித் தலைவர் |
| • நிர்வாகம் | மாவட்ட ஆட்சியரகம் |
| ஏற்றம் | 210 m (690 ft) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 8,09,913 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | இந்தி மொழி, ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 110040 |
| மக்களவை தொகுதி | வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி |
| தில்லி சட்டமன்றத் தொகுதி | நரேலா சட்டமன்றத் தொகுதி |
| உள்ளாட்சி அமைப்பு | தில்லி மாநகராட்சி |
| இணையதளம் | https://dmnorth.delhi.gov.in/ |
நரேலா (Narela), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள வடக்கு தில்லி மாவட்டம் மற்றும் நரேலே வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது புது தில்லிக்கு வடமேற்கே 43.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது பெரும் தலைநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த நகர்புற பகுதிகள் அலிப்பூர் (10 கி.மீ.), மாடல் டவுன் (22.9 கி.மீ.) மற்றும் சோனிபத் (42 கி.மீ.) ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நரேலா வருவாய் வட்டத்தின் மக்கள் தொகை 809,913 ஆகும். அதில் 439,576 ஆண்கள் மற்றும் 370,337 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 842 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.8% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 155,299 மற்றும் 0 வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 88.78%, இசுலாமியர் 8.55, சமணர்கள் 0.29%, கிறித்தவர்கள் 0.35%, சீக்கியர்கள் 1.96% மற்றும் பிற சமயத்தினர் 0.30% வீதம் உள்ளனர்.[1]
போக்குவரத்து
நரேலா தொடருந்து நிலையம்[2] நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. இது இந்திராகாந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த மெட்ரோ நிலையம், பத்லி பகுதியில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- Ajay Kumar Sharma. A History of Educational Institutions in Delhi. Sanbun Publishers. ISBN 93-8021-314-X.
- Map of Narela tehsil