சாரநாத்

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:25, 29 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சாரநாத்
இசிபதனம்

सारनाथ

சாமாத, மிரிகதாவ,
மிகதாய, ரிசிபட்டணம், இசிபத்தான

நகரம்
தாமேக் தூபி, சாரநாத்
தாமேக் தூபி, சாரநாத்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மொழிகள்
 • அதிகாரபூர்வம்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
படிமம்:Chaukhandi Stupa on a hill, Sarnath.jpg
சாரநாத் குன்றில் அமைந்த சௌகந்தி தூபி

சாரநாத் அல்லது இசிபதனம் (Sarnath) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 10 கி.மீ. வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்.[1][2]

இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள சிங்பூர் என்ற இடத்திலேயே சைன மதத்தின் 11வது தீர்த்தங்கரர் என அழைக்கப்படும் சிரேயன்சுவநாதர் பிறந்த இடமாகும். இங்குள்ள அவரது கோவில் ஓர் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

சாரநாத் (மான்களின் நகரம்) என்ற இந்நகரம் சாமாத, மிரிகதாவ (மான் பூங்கா), மிகதாய, இசிபதனம் (ரிசிகள் தரையிறங்கிய இடம்) எனப் பல பெயர்களில் வழங்கி வருகின்றது. புத்தரால் குறிப்பிடப்பட்டுள்ள இசிபதனம் என்ற தலம் பௌத்தர்கள் தரிசிக்க வேண்டிய நான்கு பௌத்த தலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.[3]

குப்தர்கள் காலத்தில் சாரநாத் குன்றில் எண்கோண வடிவ சௌகந்தி தூபி நிறுவப்பட்டது.

இதனையும் காண்க

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
இரட்டை சிங்கப் போதிகைகள், சாரநாத்

படக்காட்சியகம்

குறிப்புகள்

  1. "SARNATH". Archived from the original on 2018-07-14. Retrieved 2017-07-12.
  2. Saranath - History
  3. (D.ii.141)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சாரநாத்&oldid=359378" இலிருந்து மீள்விக்கப்பட்டது