மிதிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
imported>Sukanthi
"right|thumb|[[மிதிலை நகரை தலைநகராகக் கொண்ட விதேக நாட்டின் வரைபடம்]] சனகன் என்னும் அரசன் ஆட்சி செய்ததாக இராமாயணம் எனும் நூல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

11:53, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

மிதிலை நகரை தலைநகராகக் கொண்ட விதேக நாட்டின் வரைபடம்

சனகன் என்னும் அரசன் ஆட்சி செய்ததாக இராமாயணம் எனும் நூல் கூறும் விதேக நாட்டின் தலைநகரம் மிதிலையாகும். இங்கு குழந்தையாயிருந்த சீதையைப் பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து மன்னன் சனகன் அவளை வளர்த்ததாக இராமாயணம் கூறுகிறது. சீதையின் சுயம்வரம் இங்கு நடந்தது.

சனகன் அரசன் ஏர் உழுது கொண்டிருக்கும் பொழுது அவருடைய நிலத்தில் ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார் அக்குழந்தைக்கு சீதை என்று பெயரிட்டார். மிதிலை நாட்டில் சிவன் வரமாக கொடுத்த வில் ஒன்று இருந்தது, அவ்வில்லை யார் எடுத்து நாண் ஏற்றுகிறார்களோ அவர்களுக்கே சீதையுடன் சுயம்வரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் எந்த இளவரசனாலும் அப்போட்டியில் வெல்ல முடியவில்லை, இறுதியாக இராமன் அப்போட்டியில் வென்று சீதையை திருமணம் செய்துகொண்டார். மன்னர் சனகனின் இளைய சகோதரனின் மூன்று புதல்விகளை முறையே, இலக்குவன், பரதன் மற்றும் சத்ருக்கனன் மணந்து கொண்டனர்.

மேற்கோள்கள்

இரஜாஜி எழுதிய இராமாயணம். வால்மிகி எழுதிய இராமாயணம்

"https://tamilar.wiki/w/index.php?title=மிதிலை&oldid=120713" இலிருந்து மீள்விக்கப்பட்டது