8 தோட்டாக்கள்
8 தோட்டாக்கள் | |
---|---|
இயக்கம் | ஶ்ரீ கணேஷ் |
தயாரிப்பு | எம். வெள்ள பாண்டியன் |
கதை | ஶ்ரீ கணேஷ் |
இசை | கே. எஸ். சுந்தரமூர்த்தி]] |
நடிப்பு | வெற்றி எம். எசு. பாசுகர் நாசர் அபர்ணா பாலமுரளி |
ஒளிப்பதிவு | தினேஷ் கே. பாபு |
படத்தொகுப்பு | நாகூரான் |
வெளியீடு | ஏப்ரல் 7, 2017 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
8 தோட்டாக்கள் (8 Thottakkal) ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில், வெற்றி, எம். எசு. பாசுகர், நாசர் (நடிகர்), அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படமாகும். கே. எஸ். சுந்தரமூர்த்தியின் இசையில், தினேஷ் கே. பாபுவின் ஒளிப்பதிவில், நாகூரானின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் 07, ஏப்ரல் 2017இல் வெளியானது.[1][2]
நடிப்பு
- வெற்றி -சத்யாவாக
- எம். எசு. பாசுகர் - கிருட்டிணமூர்த்தியாக
- நாசர் - பாண்டியனாக
- அபர்ணா பாலமுரளி - மீரா வாசுதேவனாக
- மணிகண்டன்- ஜெய்யாக
- மைம் கோபி - குணசேகரனாக
- டி. சிவா
- மீரா மிதுன்
- சார்லஸ் வினோத்
- லாலு
- இரஞ்சித்[3]
படப்பணிகள்
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப்பணிகள் ஆகத்து 2016இல் தொடங்கி நவம்பர் 2016இல் நிறைவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலேயே 47 நாட்கள் நடத்தப்பட்டன.[4][5]
கதை
இளம் காவல் அலுவலர் ஒருவர் தன் துப்பாக்கியை இழந்து விடுகின்றார். அவர் பறிகொடுத்த அந்தத் துப்பாக்கியைக் வைத்துகொண்டு இயல்பற்ற நிகழ்வுகளை அரங்கேற்றும் இயல்பான மனிதரைச்சுற்றி நிகழும் பரபரப்பான நிகழ்வுகளின் பின்னல் கதையே இத்திரைப்படம்.[6] காவல் துறைப்பணியில் புதிதாகப் பொறுப்பெடுக்கின்றார் உதவி ஆய்வாளர் சத்யா (வெற்றி). சத்யா காவல் துறையின் பணிக்கு பொருந்தி வரக்கூடிய இயல்பற்றவர். பிறர் இவரை பிழைக்கத் தெரியாதவர் எனச்சொல்வார்கள். சத்யா தன் துப்பாக்கியைத் எதிர்பாராத வகையில் தொலைத்து விடுகின்றார். அவர் தொலைத்த துப்பாக்கி ஒரு கொலை செய்யப்படுவதற்கும், கொள்ளை நிகழ்த்தப்படுவதற்கும் துணையாகி விடுகின்றது. துப்பாக்கியும் அதை எடுத்த குற்றவாளியும் தேடப்படுகின்றனர்.[7] இந்தத்தேடல் வேட்டையில் பல கொலைகள் நிகழ்கின்றன. காணமல் போன துப்பாக்கியில் இருந்த எட்டுத் தோட்டாக்கள் எவரை? எதற்காச் சாய்க்கின்றன? காணமல் போன துப்பாக்கியை எடுத்து பல திருப்பங்களை உருவாக்கியவரை காவல் துறையால் கண்டறியா இயன்றதா? என்பதே இத்திரைப்படத்தின் கதை.[8]
இசை
இத்திரைப்படத்திற்கு கேஎஸ். சுந்தரமூர்த்தி பாடலிசை, பின்னணி இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பாடல்கலை குட்டிரேவதி, ஜிகேபி, ஶ்ரீகணேஷ் ஆகியோர் எழுதியுள்ளனர். இத்திரைப்படத்தின் இசை உரிமையை யுவன் சங்கர் ராஜா பெற்றுள்ளார்.[9][10]
சான்றுகள்
- ↑ "8 Thottakkal – a crime thriller in the house". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/040816/8-thottakkal-a-crime-thriller-in-the-house.html/.
- ↑ https://tamil.filmibeat.com/movies/8-thottakkal/review.html
- ↑ http://cinema.dinamalar.com/movie-review/2317/8-Thottakkal/
- ↑ "Cop act". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Cop-act/article14568449.ece.
- ↑ http://www.deccanchronicle.com/entertainment/kollywood/040816/8-thottakkal-a-crime-thriller-in-the-house.html
- ↑ http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-8-தோட்டாக்கள்/article9625202.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2021-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210302113130/https://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=23619&id1=13.
- ↑ https://cinema.vikatan.com/movie-review/85803-8-thottakkal-movie-review.html
- ↑ "U1 Records bagged the musical rights of ‘8 Thottakkal’". Chennai Patrika. http://entertainment.chennaipatrika.com/post/2017/03/03/U1-Records-bagged-the-musical-rights-of-8-Thottakkal.aspx.
- ↑ http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/apr/05/yuvan-shankar-raja-buys-rights-to-more-films-1590338.html