2,2-டைமெத்தாக்சிபுரோப்பேன்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2,2-டைமெத்தாக்சிபுரோப்பேன்
| |||
வேறு பெயர்கள்
அசிட்டோன் டைமெத்தில் அசிட்டால்
| |||
இனங்காட்டிகள் | |||
77-76-9 | |||
ChemSpider | 21106033 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
| |||
பண்புகள் | |||
C5H12O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 104.15 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.85 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −47 °C (−53 °F; 226 K) | ||
கொதிநிலை | 83 °C (181 °F; 356 K) | ||
15 கி/லி (20 °செ) | |||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
2,2-டைமெத்தாக்சிபுரோப்பேன் (2,2-Dimethoxypropane) என்பது C5H12O2 என்ற வேதி வாய்ப்பாடும் (CH3)2C(OCH3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டோன் டைமெத்தில் அசிட்டால் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. அசிட்டோன் மற்றும் மெத்தனால் இரண்டும் சேர்ந்து அசிட்டைலேற்ற வினைக்கு உட்படுவதால் 2,2-டைமெத்தாக்சிபுரோப்பேன் உருவாகிறது. 2-மெத்தாக்சிபுரோப்பேன் தயாரிக்கும் பொழுது இடைநிலை விளைபொருளா்கவும் இது உருவாகிறது. திசுவியல் துறையில் விலங்குத் தசைகளில் நீரிழப்பு குறைபாடு நீக்குதலில் எத்தனாலை விட 2,2-டைமெத்தாக்சிபுரோப்பேன் திறன் மிக்கதாகக் கருதப்படுகிறது.
நீரெதிர்ப்பு வேதியியல் வினைகளில் 2,2-டைமெத்தாக்சிபுரோப்பேன் நீர் மாசு அகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. வினையில் தண்ணீர் எந்த வடிவத்தில் இருந்தாலும் இச்சேர்மத்துடன் வினைபுரிந்து அசிட்டோன் மற்றும் மெத்தனாலாக மாறுகிறது.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
- MSDS பரணிடப்பட்டது 2006-03-01 at the வந்தவழி இயந்திரம்
- MSDS