1971 இந்தியப் பொதுத் தேர்தல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தியப் பொதுத் தேர்தல், 1971

← 1967 மார்ச் 1–10, 1971 [1] 1977 →

மக்களவைக்கான 518 இடங்கள்
பதிவு செய்தோர்274,189,132
வாக்களித்தோர்55.27% Red Arrow Down.svg.png 5.77pp
  First party Second party
 
தலைவர் இந்திரா காந்தி பி. சுந்தரய்யா
கட்சி வார்ப்புரு:Infobox election/shortname வார்ப்புரு:Infobox election/shortname
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ரே பரேலி -
வென்ற
தொகுதிகள்
352 25
மாற்றம் Green Arrow Up Darker.svg.png 73 Green Arrow Up Darker.svg.png 6
விழுக்காடு 43.68 5.12%

  Third party Fourth party
 
தலைவர் வாஜ்பாய் காமராஜர்
கட்சி வார்ப்புரு:Infobox election/shortname வார்ப்புரு:Infobox election/shortname
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
குவாலியர் நாகர்கோவில்
வென்ற
தொகுதிகள்
22 16
மாற்றம் Red Arrow Down.svg.png 13 புதிய கட்சி
விழுக்காடு 7.35% 10.43%

படிமம்:Lok Sabha Zusammensetzung 1971.svg

முந்தைய இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
வார்ப்புரு:Infobox election/shortname

இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
வார்ப்புரு:Infobox election/shortname

இந்தியக் குடியரசின் ஐந்தாம் நாடாளுமன்றத் தேர்தல் 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஐந்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 352 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. இந்திரா காந்தி மூன்றாம் முறையாக பிரதமரானார்.

பின்புலம்

இத்தேர்தலில் 518 தொகுதிகளில் இருந்து 518 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்களைத் தவிர இரு ஆங்கிலோ-இந்தியர்களும், வடகிழக்கு பிரதேசத்திலிருந்து (தற்கால அருணாசலப் பிரதேசம்) ஒருவரும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். 1969ல் இந்திய தேசிய காங்கிரசு இரண்டாக பிளவுபட்டது. பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் ஒரு கட்சியும், காமராஜர், நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய் தலைமையில் “நிறுவன காங்கிரசு” அல்லது ஸ்தாபனக் காங்கிரசு என்ற பெயரில் ஒரு கட்சியும் உருவாகின. மக்களவையில் பெரும்பான்மையை இழந்த இந்திரா திமுக, சிபிஎம் ஆகிய கட்சிகளின் வெளி ஆதரவுடன் இரு ஆண்டுகள் பதவியில் நீடித்தார். பதவிக்காலம் முடிய ஓராண்டுக்கு முன்னராகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். கரீபீ ஹடாவோ (வறுமையை ஒழி) என்ற புதிய கோஷத்துடன் அவர் செய்த பிரச்சாரம் மக்களை மிகவும் கவர்ந்தது. இந்திராவின் காங்கிரசு நிறுவன காங்கிரசு தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியை எளிதில் தோற்கடித்து 352 தொகுதிகளில் வென்றது.

முடிவுகள்

மொத்தம் 55.27% வாக்குகள் பதிவாகின

கூட்டணி கட்சி வென்ற இடங்கள் மாற்றம் வாக்கு %
காங்கிரசு கூட்டணி
இடங்கள்: 375
மாற்றம்:
Green Arrow Up Darker.svg.png113
வாக்கு %: 47.52
இந்திரா காங்கிரசு 352 Green Arrow Up Darker.svg.png93 43.68
திமுக 23 3.84
தேசிய ஜனநாயகக் கூட்டணி
இடங்கள்: 51 மாற்றம்: Red Arrow Down.svg.png65
வாக்கு %: 24.34
காங்கிரசு (ஓ) 16 Red Arrow Down.svg.png17 10.43
பாரதீய ஜனசங்கம் 22 Red Arrow Down.svg.png22 7.37
சுதந்திராக் கட்சி 8 Red Arrow Down.svg.png15 3.07
சம்யுக்தா சோசலிசக் கட்சி 3 Red Arrow Down.svg.png10 2.43
பிரஜா சோசலிசக் கட்சி 2 Red Arrow Down.svg.png17 1.04
மற்றவர்கள் சிபிஎம் 25 Red Arrow Down.svg.png6 5.13
சிபிஐ 23 4.73
மற்றவர்கள் 67 Red Arrow Down.svg.png12 18.3

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:இந்தியத் தேர்தல்கள்