1951 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
வார்ப்புரு:Infobox census 1951 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (1951 Census of India) இது இந்தியாவின் 9வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1871-ஆம் ஆண்டு முதல், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்பு முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.[1] மேலும் இது இந்தியப் பிரிவினைக்கு பிறகு முதன்முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாகும்.[2] மேலும் இக்கணக்கெடுப்பு, 1948-இல் இயற்றப்பட்ட இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் மேற்கொண்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பாகும்.
1951 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 36,10,88,090 (முப்பத்தி ஆறு கோடியே பத்து இலட்சத்து எண்பத்தி எட்டாயிரத்து தொன்னூறு) ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் வீதம் இருந்தனர்.[3] 1941 - 1951 முடிய பத்தாண்டுகளில் மொத்த மக்கள்தொகை வளர்ச்சி 4,24,27,510 (13.31%) ஆக உயர்ந்துள்ளது. 1941-ஆம் ஆண்டின் மக்கள்தொகை 31,86,60,580 ஆகும். 1951-ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை குறைந்தற்கு முக்கிய காரணம் இந்தியப் பிரிவினை ஆகும்.[4] ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1951-ஆம் ஆண்டில் மட்டும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை.[5] 1951-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் போதே தேசிய குடிமக்கள் பதிவேடும் பராமரிக்கப்பட்டது.[6][7] 1951 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18% இந்தியர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். மக்களின் சராசரி ஆயுட்காலம் 32 ஆண்டுகள் என இருந்தது.[8]
1951-ஆம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மூலம், 72,26,000 (எழுபத்தி இரண்டு இலட்சத்தி இருபத்தி ஆறாயிரம்) இசுலாமியர்கள் இந்தியாவிலிருந்து, தற்கால பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு குடியேறியுள்ளனர். மேலும் தற்கால பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் பகுதிகளில் வாழ்ந்த 72,49,000 இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள, சமணர்கள் இந்தியாவில் குடியேறினர் என அறியப்பட்டது.[9]
மொழிகள் & மக்கள்தொகை பரம்பல்
தரம் | மொழிகள் | 1951 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு[10] | |
---|---|---|---|
பேசுபவர்கள் | விழுக்காடு | ||
1 | இந்தி, உருது, பஞ்சாபி | 149,944,311 | 42.01% |
2 | தெலுங்கு | 32,999,916 | 9.24% |
3 | மராத்தி | 27,049,522 | 7.57% |
4 | தமிழ் | 26,546,764 | 7.43% |
5 | வங்காளி | 25,121,674 | 7.03% |
7 | குஜராத்தி | 16,310,771 | 4.57% |
8 | கன்னடம் | 14,471,764 | 4.05% |
9 | மலையாளம் | 13,380,109 | 3.69% |
10 | ஒடியா | 13,153,909 | 3.21% |
6 | அசாமியம் | 4,988,226 | 1.39% |
சமயவாரி மக்கள்தொகை
1951 இந்திய மக்கள்தொகையில் இந்துக்கள் 306 மில்லியன் (84.1%) மக்கள் இருந்தனர்.[11] இசுலாமியர்கள் 34 மில்லியன் (9.8%) மக்கள் இருந்தனர்.[12][13][14][15][16][17][18] கிறித்தவர்கள் 8.3 மில்லியன் மக்கள் இருந்தனர்[13]
1947 இந்திய விடுதலைக்கு முன்னர், பிரித்தானிய இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 73% ஆக இருந்தனர்.
சமயங்கள் | மக்கள்தொகை % 1951 |
---|---|
இந்துக்கள் | 84.1% |
இசுலாமியர்கள் | 9.8% |
கிறித்தவர்கள் | 2.3% |
சீக்கியர்கள் | 1.89% |
பௌத்தர்கள் | 0.74% |
முன்னோர் வழிபாட்டினர் & பிறர் | 0.43% |
சமணர்கள் | 0.46% |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Dr. M. Vijaynunni (26–29 August 1998). "Planning for the 2001 Census of India Based on the 1991 Census" (PDF). 18th Population Census Conference. Honolulu, Hawaii, USA: Association of National Census and Statistics Directors of America, Asia, and the Pacific. Archived from the original (PDF) on 19 November 2008. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.
- ↑ "India's religions by numbers". 26 August 2015 – via www.thehindu.com.
- ↑ "Census of India: Variation in Population since 1901". Censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-14.
- ↑ "Census data" (PDF). www.isec.ac.in.
- ↑ "Budget data" (PDF). indiabudget.nic.in. Archived from the original (PDF) on 2008-12-19. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "National Register of Citizens in Assam: Issue of illegal foreigners continues to be a major political one".
- ↑ "Assam: Overhaul of National Register of Citizens sparks controversy".
- ↑ "Despite stains, democracy has thrived in India".
- ↑ "When Muslims left Pakistan for India".
- ↑ Dasgupta, Jyotirindra (1970). Language Conflict and National Development: Group Politics and National Language Policy in India. Berkeley: University of California, Berkeley. Center for South and Southeast Asia Studies. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520015906.
- ↑ "Muslim population growth slows".
- ↑ "India's religions by numbers".
- ↑ 13.0 13.1 "Muslims in Indian army".
- ↑ Abantika Ghosh , Vijaita Singh (24 January 2015). "Census: Hindu share dips below 80%, Muslim share grows but slower". Indian Express. Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
- ↑ Aariz Mohammed (1–15 May 2013). "Demographic Dividend and Indian Muslims - i". Milli Gazette. Milli Gazette. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
- ↑ Aariz Mohammed (1–15 May 2013). "Demographic Dividend and Indian Muslims - i". Milli Gazette. Milli Gazette. Archived from the original (PDF) on 2018-08-12. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
- ↑ "Religious taxonomy of states" (PDF). Archived from the original (PDF) on 2012-10-04. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
- ↑ "Social justice" (PDF).