1935
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1935 (MCMXXXV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.
- மார்ச் 2 - சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மஹிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.
- மார்ச் 21 - பேர்சியாவின் பெயர் ஈரான் ஆக மாற்றப்பட்டது.
- மே 31 - பாகிஸ்தானில் 7.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 11 - எப்.எம் ஒளிபரப்பை எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் ஐக்கிய அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் துவக்கினார்.
- ஜூலை 6 - சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 2 - புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 423 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 5 - மொனோபொலி மட்டை ஆட்டம் முதன் முதலில் பாக்கர் சகோதரர்களினால் வெளியிடப்பட்டது.
- டிசம்பர் 18 - லங்கா சமசமாஜக் கட்சி இலங்கையில் தொடக்கப்பட்டது.
பிறப்புகள்
- மார்ச் 2 - குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)
- ஏப்ரல் 23 - இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (இ. 2009)
- அக்டோபர் 7 - தாமஸ் கெநீலி, ஆத்திரேலிய எழுத்தாளர்
இறப்புகள்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஜேம்ஸ் சாட்விக்
- வேதியியல் - பிரெடெரிக் ஜோலியட், ஐரீன் ஜோலியட் கியூரி
- மருத்துவம் - ஆன்சு ஸ்பிமான்
- இலக்கியம் - வழங்கப்படவில்லை
- அமைதி - கார்ல் வொன் ஒசீத்ஸ்கி