1919
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1919 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1919 MCMXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1950 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2672 |
அர்மீனிய நாட்காட்டி | 1368 ԹՎ ՌՅԿԸ |
சீன நாட்காட்டி | 4615-4616 |
எபிரேய நாட்காட்டி | 5678-5679 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1974-1975 1841-1842 5020-5021 |
இரானிய நாட்காட்டி | 1297-1298 |
இசுலாமிய நாட்காட்டி | 1337 – 1338 |
சப்பானிய நாட்காட்டி | Taishō 8 (大正8年) |
வட கொரிய நாட்காட்டி | 8 |
ரூனிக் நாட்காட்டி | 2169 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4252 |
1919 (MCMXIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - ஸ்கொட்லாந்தில் அயோலயர்என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 18 - முதலாம் உலகப் போர்: அமைதி உச்சி மாநாடு பிரான்சில் ஆரம்பமாயிற்று. ஜூன் 28 இல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- பெப்ரவரி 3 - சோவியத் படையினர் உக்ரெனைப் பிடித்தன.
- பெப்ரவரி 14 - போலந்து-சோவியத் போர் ஆரம்பமாயிற்று.
- மார்ச் 9- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.
- மார்ச் 23 - இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியான முசோலினியின் பாசிஸ்ட் கட்சி உதயம் ஆனது.
- ஏப்ரல் 5 - எஸ்.எஸ். லயல்டி (RMS Empress of India (1891))என்ற கப்பல் கம்பனி முதன்முதலாக மும்பை முதல் பிரிட்டன் வரை கப்பல் போக்குவரத்தை துவங்கியது.
- ஏப்ரல் 13 - இந்தியா, அம்ரிட்சரில் பிரித்தானியப் படையினர் 379 இந்தியர்களைச் சுட்டுக் கொன்றனர்.
- மே 9 - இலங்கையில் உணவுக் கட்டுப்பாடு முதற் தடவையாக கொண்டுவரப்பட்டது.
- ஜூன் 28 - தமிழறிஞர் வண. டி. ஹிப்போலைற் (Rev. Fr. T. Hyppolyte) மன்னாரில் காலமானார்.
- ஆகத்து 5 - யாழ் ஆயராக வண. ஜே. ஏ. புரோல்ட் (Rev. J. A. Brault) தெரிவானார்.
- அகஸ்ட் 19 - ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.
- ஆகத்து 31 - அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
திகதி குறிப்பிடாத நிகழ்வுகள்
- ஏப்ரல் - யாழ்ப்பாணத்தில் சீமெந்துத் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்கவென சிம்கொக் (Mr Simcock) என்ற நிபுணரை "ஹரிசன் அண்ட் குரொஸ்ஃபீல்ட்" என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியது.
- டிசம்பர் - Jaffna Historical Society என்ற அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
- மார்ச் 28 - டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (இ. 2009)
- மே 21 - எம். என். நம்பியார், நடிகர் (இ. 2008)
- ஆகத்து 23 - சுசுமு ஓனோ, ஜப்பானியத் தமிழறிஞர் (இ. 2008)
இறப்புகள்
- செப்டம்பர் - ஆபிரகாம் பண்டிதர், தமிழிசைக் கலைஞர் (பி.. 1859)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஜொகான்னஸ் ஸ்டார்க் (Johannes Stark)
- வேதியியல் - வழங்கப்படவில்லை
- மருத்துவம் - ஜூலிஸ் போடெட்
- இலக்கியம் - கார்ல் ஸ்பிட்டெலர்