1897 அஸ்ஸாம் நிலநடுக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox earthquake

1897 அஸ்ஸாம் நிலநடுக்கம் (1897 Assam earthquake) என்பது 1897-ம் ஆண்டு ஜூன் 12-ம் நாள் இந்தியாவில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கம் ஆகும். இது ரிக்டர் அளவில் 8.7 எனப் பதிவாகியது. இதன் விளைவாக 6,000 மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். இது அப்பகுதியிலிருந்த கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியது. மேலும் இது இந்தியாவின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டது.[1] மேலும் டாக்காவில் (கிழக்கு வங்காளத்தின் தலைநகரம்) அதிகமான மக்கள் உயிரை இழந்தனர். இதனால் 50 மைல் நீள இருப்புப்பாதை முழுவதுமாக அழிக்கப்பட்டது. டார்ஜிலிங்கில் உள்ள தேயிலைத் தோட்டங்களும் கட்டிடங்களும் அழிக்கப்பட்டன. இதனால் தேயிலைத் தொழில் அழிந்தது. கிழக்கு வங்காளத்தில் பல பாலங்கள் உடைந்த காரணத்தால் தொடருந்துப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; E87 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=1897_அஸ்ஸாம்_நிலநடுக்கம்&oldid=146545" இருந்து மீள்விக்கப்பட்டது