1884
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1884 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1884 MDCCCLXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1915 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2637 |
அர்மீனிய நாட்காட்டி | 1333 ԹՎ ՌՅԼԳ |
சீன நாட்காட்டி | 4580-4581 |
எபிரேய நாட்காட்டி | 5643-5644 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1939-1940 1806-1807 4985-4986 |
இரானிய நாட்காட்டி | 1262-1263 |
இசுலாமிய நாட்காட்டி | 1301 – 1302 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 17 (明治17年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2134 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4217 |
ஆண்டு 1884 (MDCCCLXXXIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஜனவரி 4 - ஃபாபியன் அமைப்புலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
- பெப்ரவரி 1 - ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் முதலாவது பதிப்பு வெளிவந்தது.
- ஏப்ரல் 22 - இங்கிலாந்தில் கொல்செஸ்டர் நகரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் பலத்த சேதம் ஏற்பட்டது.
- ஏப்ரல் 26 - யாழ்ப்பாணத்தில் முதலாவது வைஎம்சிஏ (YMCA) பேராசிரியர் பிராங்க் சாண்டேர்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
- மே 1 - ஐக்கிய அமெரிக்காவில் தொழிற்சங்கங்கள் எட்டு மணி நேர வேலையை முதற்தடவையாக வலியுறுத்தின.
- ஜூலை 5 - ஜெர்மனி கமரூனைக் கைப்பற்றியது.
- ஆகஸ்ட் 5 விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.
- செப்டம்பர் 4 - குற்றவாளிகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சுக்கு அனுப்பும் கொள்கையை பிரித்தானியா கைவிட்டது.
- அக்டோபர் 13 - அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது.
- டிசம்பர் 6 - வாஷிங்டன் நினைவுச்சின்னத்தின் அமைப்பு வேலைகள் முடிவடைந்தன.
- டிசம்பர் 14 - இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
நாள் குறிக்கப்படாதவை
- சுற்றுயர்த்தி முதன்முதலாக இலண்டனைச் சேர்ந்த ஜே. ஈ. ஹால் என்பவரால் அமைக்கப்பட்டது
- ஸ்டெபான்-போல்ட்ஸ்மன் விதியை லுட்விக் போல்ட்ஸ்மன் திருத்தி எழுதினார்.
- உலகின் முதலாவது தானியங்கித் துப்பாக்கியை மெக்சிகோ இராணுவத் தளபதி மனுவேல் மொண்ட்ராகன் வடிவமைத்தார்.
- 1884-1885 - பிரான்ஸ் வியட்நாமைக் கைப்பற்றியது.
- கொக்கக் கோலா முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.
பிறப்புகள்
- ஏப்ரல் 2 - ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழறிஞர் (இ. 1944)
- ஏப்ரல் 18 - ஜான் ஆன்வெல்ட், எஸ்தோனியாவின் புரட்சித் தலைவர் (1937)
- மே 8 - ஹாரி எஸ். ட்ரூமன், ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1972)
- அக்டோபர் 14 - சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் (இ. 1969)
- அக்டோபர் 20 - டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதமர் (பி. 1952]])
- டிசம்பர் 3 - ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி (இ. 1963)
இறப்புகள்
- ஜனவரி 6 - கிரிகோர் ஜோஹன் மெண்டல், ஆஸ்திரியாவின் மரபியல் அறிஞர் (பி. 1822)
- மே 28 - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறிஸ்தவ ஊழியர் (பி. 1822)
- இந்துபோர்ட் இராசரத்தினம், யாழ்ப்பாணத்து அரசியல்வாதி (இ. 1970)