1812
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1812 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1812 MDCCCXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1843 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2565 |
அர்மீனிய நாட்காட்டி | 1261 ԹՎ ՌՄԿԱ |
சீன நாட்காட்டி | 4508-4509 |
எபிரேய நாட்காட்டி | 5571-5572 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1867-1868 1734-1735 4913-4914 |
இரானிய நாட்காட்டி | 1190-1191 |
இசுலாமிய நாட்காட்டி | 1226 – 1227 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 9 (文化9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2062 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4145 |
1812 (MDCCCXII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- பெப்ரவரி 2 - ரஷ்யா கலிபோர்னியாவில் தோல் வர்த்தக குடியேற்றத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தது.
- பெப்ரவரி 7 - மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
- மார்ச் 26 - வெனிசுவேலாவில் கரக்காஸ் நகரம் நிலநடுக்கத்தால் அழிந்தது.
- ஏப்ரல் 30 - அமெரிக்காவில் உள்ள 50 மாகானங்களில் ஒன்றான லூசியானா 18வது மாநிலமாக இணைந்தது.
- மே 11 - லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரித்தானியப் பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- மே 25 - இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 28 - ரஷ்ய-துருக்கி போர் முடிவுக்கு வந்தது.
- ஜூன் 18 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் போர் மூண்டது.
- ஜூலை 12 - அமெரிக்கா கனடாவை ஊடுருவியது.
- ஜூலை 22 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.
- ஆகஸ்ட் 11 - இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.
- செப்டம்பர் 14 - நெப்போலியனின் படைகள் மொஸ்கோவை அடைந்தன. மொஸ்கோ அந்நகர மக்களால் தீவைக்கப்பட்டது.
- அக்டோபர் 19 - நெப்போலியன் மொஸ்கோவில் இருந்து விலகத் தொடங்கினான்.
- டிசம்பர் 12 - ரஷ்யா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு தோல்வியில் முடிவுற்றது.
தேதி அறியப்படாதவை
- பின்லாந்தின் தலைநகர் தூர்க்குவில் இருந்து ஹெல்சிங்கிக்கு மாற்றப்பட்டது.
- இலங்கையில் உருளைக் கிழங்கு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.
- அமெரிக்க மதப் பிரசாரகர்கள் இந்தியாவுக்கு முதன் முதலில் அனுப்பப்பட்டனர்.
பிறப்புகள்
- பெப்ரவரி 7 - சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (இ. 1870)
இறப்புகள்
1812 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி புதன் நெட்டாண்டு
மேற்கோள்கள்
- ↑ "Helsinki 200: 8 April 1812 Emperor Alexander I promotes Helsinki to the capital of the Grand Duchy". Archived from the original on August 10, 2017. பார்க்கப்பட்ட நாள் August 1, 2017.
- ↑ "Fires, Great", in The Insurance Cyclopeadia: Being an Historical Treasury of Events and Circumstances Connected with the Origin and Progress of Insurance, Cornelius Walford, ed. (C. and E. Layton, 1876) p. 67
- ↑ I. Daniel Rupp, History of Lancaster County: To which is Prefixed a Brief Sketch of the Early History of Pennsylvania