1706
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1706 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1706 MDCCVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1737 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2459 |
அர்மீனிய நாட்காட்டி | 1155 ԹՎ ՌՃԾԵ |
சீன நாட்காட்டி | 4402-4403 |
எபிரேய நாட்காட்டி | 5465-5466 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1761-1762 1628-1629 4807-4808 |
இரானிய நாட்காட்டி | 1084-1085 |
இசுலாமிய நாட்காட்டி | 1117 – 1118 |
சப்பானிய நாட்காட்டி | Hōei 3 (宝永3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1956 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4039 |
1706 (MDCCVI) என்பது கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் தொடங்கியது.
நிகழ்வுகள்
- சனவரி 26 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆத்திரியப் படையினரால் பவேரியா தொகுது கைப்பற்றப்பட்டமைக்கு எதிராக பவேரியர்களின் எழுச்சி 75 நாட்களுக்குப் பிறகு முடிவடைந்தது.
- சனவரி 26 – பெரும் வடக்குப் போர்: 34,000 சுவீடிய, போலந்துப் படைகளைக் கொண்ட ஒரு கூட்டணி குளிர்காலத்தில் கிரத்னோ என்ற அப்போதைய லித்துவேனிய நகரத்தை முற்றுகையிட்டு, 41,000 உருசிய, சாக்சன் படைகளுடன் மோதியது. ஏப்ரல் 10 வரை நீடித்த கிட்டத்தட்ட மூன்று மாத சண்டைக்குப் பிறகு, இப்போது பெலருசில் அமைந்துள்ள நகரத்தின் கட்டுப்பாட்டை சுவீடன் கைப்பற்ற்றியது.
- மார்ச்சு 27 – எத்தியோப்பியாவின் பேரரசர் முதலாம் இயாசுசு துறவறம் மேற்கொண்டு ஒரு மடாலயத்தில் ஓய்வு பெற்றதை அடுத்து, உயர் அதிகாரிகள் குழு எத்தியோப்பியாவின் பேரரசராக இயாசுசின் மகன் முதலாம் டெக்கில் கைமனோட்டை நியமித்தது.
- ஏப்ரல் 27 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: 1705 இல் இங்கிலாந்து கைப்பற்றிய பார்செலோனா நகரை, பிரான்சிய, எசுப்பானியப் படைகள் 14 நாட்கள் முற்றுகையின் பின்னர் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
- மே 12 – ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதியில் முழுமையான கதிரவ மறைப்பு அவதானிக்கப்பட்டது.
- சூன் 9 – டென்மார்க்-நார்வேயின் நான்காம் பிரடெரிக் மன்னர் முதல் இரண்டு சீர்திருத்தத் திருச்சபையின் என்ரிக் புளூட்சாவ், பர்த்தலோமேயு சீகன்பால்க் ஆகிய லூத்தரன் மதப்பரப்புனர்களை (இன்றைய தமிழ்நாட்டில் உள்ள) தானிசு இந்தியா குடியேற்றத்திற்கு அனுப்பினார்.
- சூன் 28 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: போர்த்துக்கல் படையினர் மத்ரித் நகரைக் கைப்பற்றி, ஆப்சுபர்கு மரபின் ஆறாம் சார்லசை எசுப்பானியாவின் மன்னராக அறிவித்தனர். போர்பன் ஆட்சியாளர் ஐந்தாம் பிலிப்பு நாட்டை விட்டுத் தப்பி ஓடினார்.
- சூலை 22 – இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான ஒன்றிய ஒப்பந்தம் இலண்டனில் தேசிய சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டது.[1]
- ஆகத்து 4 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஐந்தாம் பிலிப்பு மன்னரின் எசுப்பானிய போர்பன் இராணுவம் மத்ரித்தை போர்த்துக்கீசரிடம் இருந்து மீளக் கைப்பற்றியது.
- அக்டோபர் - தோமசு டுவைனிங் முதலாவது தேனீர் அறையை இலண்டன் ஸ்ட்ராண்ட் 216 ஆம் இலக்கத்தில் திறந்தார். இது இன்றும் (2024) திறந்துள்ளது.[2][3][4]
- நவம்பர் 4 – இசுக்காட்லாந்து நாடாளுமன்றம் 116 இற்கு 83 என்ற கணக்கில், இங்கிலாந்துடனான இசுக்காட்லாந்தின் இணைப்பையும், பெரிய பிரித்தானிய இராச்சியத்தை நிறுவவும் அனுமதி அளித்தது.[5]
- நவம்பர் 15 – ஐந்து மாதங்களுக்கு முன்னர் தலாய் லாமா பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஆறாம் தலாய் லாமா கிங்காய் மாகாணத்தில் தலைமறைவாய் இருந்தபோது காணாமல் போனார், இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
- திசம்பர் 31 – பிரெஞ்சு இந்தியாவின் (இன்றைய புதுச்சேரியின்) முதலாவது தலைமை ஆளுநர் பிரான்சுவா மார்ட்டின் ஏழாண்டு பதவியின் பின்னர் ஓய்வு பெற்றார். இவருக்குப் பதிலாக பியேர் துலீவியர் புதிய தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பிறப்புகள்
- சனவரி 17 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்க மெய்யியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 1790)
- மார்த்தாண்ட வர்மர், திருவிதாங்கூர் அரசை நிறுவியவர் (இ. 1758)
இறப்புகள்
- சத்யாபினவ தீர்த்தர், இந்து மெய்யியலாளர்
- இராணி மங்கம்மாள், மதுரை ஆட்சியாளர்
மேற்கோள்கள்
- ↑ Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 204–205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ "Icons, a portrait of England 1700-1750". Archived from the original on 17 ஆகத்து 2007. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகத்து 2007.
- ↑ Button, Henry G.; Lampert, Andrew P. (1976). The Guinness Book of the Business World. Enfield: Guinness Superlatives. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900424-32-X.
- ↑ "About Twinings - 216 Strand". Twinings. 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-02-13.
- ↑ "Acts of Union 1707", MEMIM Encyclopedia