1,3-இருமெத்தில்-2-இமிடசோலிடினோன்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,3-டைமெத்தில்-2-இமிடசோலிடைனோன்
| |||
வேறு பெயர்கள்
இருமெத்திலெதிலீன்யூரியா
N,N'-இருமெத்திலிமிடசோலிடினோன் | |||
இனங்காட்டிகள் | |||
80-73-9 | |||
ChEMBL | ChEMBL12338 | ||
ChemSpider | 6409 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 6661 | ||
| |||
பண்புகள் | |||
C5H10N2O | |||
வாய்ப்பாட்டு எடை | 114.1457 | ||
தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
உருகுநிலை | 8.2[1] °C (46.8 °F; 281.3 K) | ||
கொதிநிலை | 225 °C (437 °F; 498 K) | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 120 °C (248 °F; 393 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,3-இருமெத்தில்-2-இமிடசோலிடினோன் (1,3-Dimethyl-2-imidazolidinone, DMI) என்பது ஒரு வளைய யூரியா ஆகும். இது உயர் கொதிநிலை புரோட்டான் தரா கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] இது நிறமற்றது. உயர் முனைவுக் கரைப்பான். உயர் வெப்ப மற்றும் வேதி நிலைப்புத்தன்மை உடையது. டி.எம்.பி.யூ (DMPU) என்பது இதன் படிவொத்த அல்லது ஒருபடித்தான கரைப்பான் ஆகும். பாஸ்ஜீன் உடன் 1,2 டை மெதில் எத்திலின் டை அமீன் என்னும் சேர்மத்தை வினைப்படுத்துவதன் மூலம் 1,3-இரு மெதில்-2- இமிடசோலிடினோன் தயாரிக்க முடியும்.
கரைப்பான்
1,3 இருமெத்தில்-2-இமிடசோலிடினோன் சிறந்த கனிமக் கரைப்பானகவும், கரிமக் கரைப்பானாகவும் செயல்படுகிறது. டி.எம்.ஐ. (DMI) மற்றும் டி.எம்.பி.யூ. (DMPU) ஆகிய இரண்டு கரைப்பான்களும், புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய எச்.எம்.பி.ஏ (HMPA)[3] கரைப்பானுக்கு மாற்று கரைப்பானாகவும், பதிலி கரைப்பானாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
டி.எம்.ஐ. (D.M.I.) அழுக்கு நீக்கியாகவும், சாயப்பொருளாகவும் பயன்படுகிறது. மின்னனுப் பொருள்கள் தயாரித்தலிலும், பலபடிச் சேர்மம் உற்பத்தி செய்தலிலும் 1,3-இருமெதில்-2-இமிடசோலிடினோன் [DMI] பெரும் பங்கு வகிக்கிறது.
இதன் நச்சுத்தன்மை தோலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.[4]
மேற்கோள்கள்
- ↑ DMI at Mitsui Chemicals
- ↑ Leahy, Ellen M. "1,3-Dimethyl-2-imidazolidinone" e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis (2001),எஆசு:10.1002/047084289X.rd342
- ↑ Lo, C.-C.; Chao, P.-M. (1990). "Replacement of carcinogenic solvent HMPA by DMI in insect sex pheromone synthesis". Journal of Chemical Ecology 16 (12): 3245–3253. doi:10.1007/BF00982095.
- ↑ DMI பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் at TCI