1,2,4-பியூட்டேன் டிரையால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox NFPA
1,2,4-பியூட்டேன் டிரையால்
படிமம்:1,2,4-Butanetriol.png
C=black, H=white, O=red
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பியூட்டேன்-1,2,4-டிரையால்
வேறு பெயர்கள்
1,2,4-பியூட்டேன் டிரையால்
1,2,4-டிரை ஐதராக்சி பியூட்டேன்
டிரையால்124
2-டியாக்சியெரித்ரிட்டால்
இனங்காட்டிகள்
3068-00-6 N
ChEBI CHEBI:88063 Yes check.svg.pngY
ChEMBL ChEMBL1356759
ChemSpider 17287 Yes check.svg.pngY
EC number 221-323-5
InChI
  • InChI=1S/C4H10O3/c5-2-1-4(7)3-6/h4-7H,1-3H2 Yes check.svg.pngY
    Key: ARXKVVRQIIOZGF-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C4H10O3/c5-2-1-4(7)3-6/h4-7H,1-3H2
    Key: ARXKVVRQIIOZGF-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 18302
  • OCC(O)CCO
  • OCCC(O)CO
பண்புகள்
C4H10O3
வாய்ப்பாட்டு எடை 106.12 g·mol−1
அடர்த்தி 1.19
கொதிநிலை 190 முதல் 191 °C (374 முதல் 376 °F; 463 முதல் 464 K) 18 டார்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
தீப்பற்றும் வெப்பநிலை 112 °C (234 °F; 385 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

1,2,4-பியூட்டேன் டிரையால் (1,2,4-Butanetriol) என்பது C4H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தெளிவான அல்லது இலேசான மஞ்சள் நிறம் கொண்டதாக நெடியற்று நீருறிஞ்சும் சேர்மமாக 1,2,4-பியூட்டேன் டிரையால் அறியப்படுகிறது. பாகுநிலையிலுள்ள இந்நீர்மம் தீப்பற்றி எரியக்கூடியதாகும். ஓர் ஆல்ககால் என்று வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் மூன்று நீர் நாட்ட ஆல்ககால் சார்ந்த ஐதராக்சில் குழுக்களை கொண்டுள்ளது. கிளிசரால் மற்றும் எரித்ரிட்டால் போன்ற ஆல்ககால் சேர்மங்களை ஒத்த சேர்மமாக இது கருதப்படுகிறது. சாத்தியமுள்ள இரண்டு ஆடி எதிர் உருக்கள் கொண்டு சமச்சீரற்றதாக 1,2,4-பியூட்டேன் டிரையால் காணப்படுகிறது.

முக்கியமான இராணுவ உந்துபொருளான பியூட்டேன் டிரையால் டிரைநைட்ரேட்டை தயாரிக்க 1,2,4-பியூட்டேன் டிரையால் பயன்படுத்தப்படுகிறது.

கொழுப்பைக் குறைக்கும் கிரெசுட்டர், செட்டியா போன்ற மருந்துகளைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது, 3,4-டையைதராக்சிபியூட்டனாயிக் அமிலத்தை 3- ஒரு சமச்சீரற்ற மூலக்கூறாக ஐதராக்சி-காமா-பியூட்டைரோலாக்டோன் பயன்படுத்தி வழிப்பெறுதிகளாக இவை பெறப்படுகின்றன. [1][2] சில பல்லெசுத்தர்கள் தயாரிப்பதற்கான ஒருமங்களில் ஒன்றாகவும் ஒரு கரைப்பானாகவும் 1,2,4-பியூட்டேன் டிரையால் கருதப்படுகிறது.

கிளைசிடாலை ஐதரோபார்மைலேற்றம் செய்து விளைபொருளை தொடர்ந்து ஒடுக்கம் செய்தல், எசுத்தராக்கம் செய்யப்பட்ட மேலிக் அமிலத்தை சோடியம் போரோ ஐதரைடு ஒடுக்கம் செய்தல், மேலிக் அமிலத்தை வினையூக்க ஐதரசனேற்றம் செய்தல் போன்ற செயற்கை தயாரிப்பு முறைகள் மூலமாக 1,2,4-பியூட்டேன் டிரையால் தயாரிக்கப்படுகிறது. [3] இருப்பினும், அதிகரித்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி உயிரி தொழில்நுட்ப தொகுப்பு முறையிலும் இது தயாரிக்கப்படுகிறது. [4]

மேற்கோள்கள்

  1. Niu, Wei; Molefe, Mapitso N.; Frost, J. W. (2003). "Microbial Synthesis of the Energetic Material Precursor 1,2,4-Butanetriol". Journal of the American Chemical Society 125 (43): 12998–12999. doi:10.1021/ja036391+. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. 
  2. "Biosynthetic Pathways". Archived from the original on 2011-06-26. பார்க்கப்பட்ட நாள் 24 November 2010.
  3. Chemical & Engineering News, May 31, 2004, Volume 82, Number 22, pp. 31-34, "Biomass or Bust" Web version
  4. The State News, Feb. 12, 2004, "Propelling Research" by Meghan Gilbert. = 22196 Web version பரணிடப்பட்டது 2002-09-02 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/index.php?title=1,2,4-பியூட்டேன்_டிரையால்&oldid=142931" இருந்து மீள்விக்கப்பட்டது