ஹம்ச நந்தினி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹம்ச நந்தினி
Hamsa Nandini Filmfare Awards South (cropped).jpg
60வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் ஹம்ச நந்தினி
பிறப்புபூனம் பர்தக்[1]
புனே, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2004–present

ஹம்சா நந்தினி (பிறப்பு பூனம் பர்தக் ) ஓர் இந்திய வடிவழகியும், நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையும் ஆவார்.[2][3]மாஸ்டார்ஸ் இதழ், பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் ஐதராபாத்து இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் 2011, 2013 போன்றவற்றின் விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளார்.[4] தனது பூனம் என்ற தனது இயற்பெயரில் சில படங்களில் தோன்றினார். ஆனால் திரையுலகில் பூனம் என்ற பெயரில் அதிகமானவர்கள் இருந்ததால், இயக்குனர் வம்சி இவருக்கு ஹம்ச நந்தினி என்று பெயர் சூட்டினார்[5] 2015 இல் தெலுங்கு வரலாற்று ருத்ரமாதேவியில் போர் இளவரசி மதனிகாவாக நடித்தார். தற்போது முக்கியமாக தெலுங்கு திரையுலகில் குத்தாட்டப் பாடல்களில் தோன்றுகிறார்.[6]

ஆரம்ப கால வாழ்க்கை

ஹம்ச நந்தினி புனேவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் வடிவழகியாக மாற மும்பை சென்றார்.[5] 2002 முதல் விளம்பரத் துறையில் இருந்து வருகிறார், மேலும் மாஸ்டார்ஸ் இதழ், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக், ஐதராபாத் இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் 2011 & 2013 மற்றும் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். வணிகத்தில் பட்டம் பெற்ற இவர் 2009 இல் மனித வளத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார்.[4][5]

குத்தாட்டப் பாடல்கள்

2013 இல், மிர்ச்சி\',[7]பாய்,[8]பாய்,[9] அத்தாரிண்டிகி தாரேதி மற்றும் ராமய்யா வஸ்தவய்யா போன்ற படங்களில் இடம் பெற்ற குத்தாட்டப் பாடல்களில் இடம்பெற்றார்.[10] "ஒரு ஐந்து நிமிட நடனம்" தனக்கு "அற்புதமான வெளிப்பாடு " மற்றும் "மக்களை சென்றடைவதற்கான ஒரு நல்ல தளத்தை" தருவதால், மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்.[11] 2014இல் வெளியான லெஜண்ட் படத்தில் நடித்தார்.[2]

சான்றுகள்

  1. "T'wood producers should improve: Poonam". The Times of India.
  2. 2.0 2.1 "It's fun to shoot with Balakrishna: Hamsa Nandini". The Times of India. 20 March 2014. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.
  3. "Hotness Alert! Hamsa Nandini turns into a bikini babe on the beaches of Goa". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  4. 4.0 4.1 "Hamsa Nandini Walks the Ramp in Transparent White Saree at HIFW 2011 (Day 3) - High Resolution Photos".
  5. 5.0 5.1 5.2 "Exclusive Interview With Hamsa Nandini - Interviews". CineGoer.com. 14 May 2009. Archived from the original on 13 September 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.
  6. "Grace is different from sensuality: Hamsa Nandini". The Times of India. 17 March 2014. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.
  7. "Hamsanandini gets wild for Prabhas". The Times of India. 4 February 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.
  8. "Hamsa Nandini to jig with Pawan Kalyan". The Times of India. 6 July 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.
  9. "Hamsa Nandini to jig with Pawan Kalyan". The Times of India. 6 July 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.
  10. "Dance numbers give actors phenomenal reach: Hamsa Nandini (Interview)". Business Standard India. 29 September 2013. http://www.business-standard.com/article/news-ians/dance-numbers-give-actors-phenomenal-reach-hamsa-nandini-interview-113092900185_1.html. 
  11. Pudipeddi, Haricharan (29 September 2013). "Dance numbers give actors phenomenal reach: Hamsa Nandini". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஹம்ச_நந்தினி&oldid=23518" இருந்து மீள்விக்கப்பட்டது